மே 28ம் தேதி நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்நிலையில், திரிணாமுல், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக, உள்ளிட்ட கட்சிகளை தொடர்ந்து திமுகவும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணித்துள்ளது.

