அண்ணாமலையை விலைக்கு வாங்கிய திமுக
ஆதவ் அர்ஜூனா, “திமுக தனது மருமகனை வைத்து நடத்தும் பென் நிறுவனம், ஐபேக் நிறுவனத்தின் ரிஷி, ராபின் சர்மா, சுனில் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்து பொய் பிரச்சாரங்களை உருவாக்கி வருகிறது,” என்று குற்றம்சாட்டினார். மேலும், “இதற்காக திமுகவால் செட் செய்யப்பட்டவர்தான் அண்ணாமலை. டெல்லியில் மோடி உட்கார்ந்து மற்ற மாநிலங்களில் இதை செட் செய்கிறார், ஆனால் திமுக அவரை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிட்டது,” என்று தெரிவித்தார்.
