திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் உடலை இன்னும் அவரின் குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளவில்லை. இன்று பெற்றுகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வேண்டுமென்பது அவர்களின் கோரிக்கை.
ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம்
கவினின் குடும்பத்துக்காக களத்தில் நிற்கும் அத்தனை அமைப்புகளும், “ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் வேண்டும்’ என உறுதியாக ஒலிக்கின்றனர். கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலினே, ‘ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் தேவையில்லை. இருக்கிற சட்டங்களை தீவிரமாக செயல்படுத்தினால் போதும்.’ எனப் பேசியிருந்தார். .
கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ நாகை மாலி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் சொல்லி பேசுகையில்தான் ஸ்டாலின் அவ்வாறு கூறியிருந்தார். ஆணவக்கொலைகள் சார்ந்து முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாட்டுக்கு எதிரான குரல்கள் வலுத்து வரும் நிலையில் நாகை மாலியை தொடர்புகொண்டு பேசினேன்…
