Last Updated:
Diwali Special Train | இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு பெங்களூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து வரும் 17 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி பெங்களூரு – தூத்துக்குடி இடையிலான சிறப்பு விரைவு ரயில் அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 21 தேதிகளில் இரவு 10 மணிக்கு பெங்ளூருவில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
தூத்துக்குடி முதல் பெங்களூரு கண்டோன்மெண்ட் வரை செல்லும், சிறப்பு விரைவு ரயில் அக்டோபர் 18 மற்றும் 22 தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 04.15 மணிக்கு பெங்களூரு கண்டோண்மெண்ட் சென்றடையும்.
இந்த ரயில்கள் பெங்களூரு, ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வழியாக தூத்துக்குடி வரை செல்லும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.






