Last Updated:
கிராமப்புறங்களில் குடிமக்களுக்கு டிஜிட்டல் டெக்னாலஜியை பயன்படுத்தி மிகவும் ஸ்மார்ட்டான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பது இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்தியாவில் முதன் முதலாக டிஜிட்டல் முறையில் முகவரித் திட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் மயமாக்கும் முறை பரவலாக அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் முறையில் QR மற்றும் UPI போன்றவற்றை பயன்படுத்தி பணத்தை செலுத்தி வருகின்றனர்.
இதே போன்று ஏராளமான அரசு ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக டிஜிட்டல் முறையில் வீட்டு முகவரி வழங்கும் முறை மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தூர் நகராட்சியில் 82-வது வார்டு வசிக்கும் நபர்களுக்கு டிஜிட்டல் முறையில் வீட்டு முகவரி வழங்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் குடிமக்களுக்கு டிஜிட்டல் டெக்னாலஜியை பயன்படுத்தி மிகவும் ஸ்மார்ட்டான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பது இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். DIGIPIN எனப்படும் டிஜிட்டல் போஸ்டல் எண்ணுடன் இந்தூர் நகராட்சியின் முகவரிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அதன் மேயர் புஷ்யமித்ர பார்கவா தெரிவித்துள்ளார்.
நகரில் உள்ள அனைத்து வீடுகளிலும் தனித்துவமான கியூஆர் கோடுகளை கொண்ட முகவரிகள் பொருத்தப்படும் என்றும் அவர் கூறினார். இதனை ஸ்கேன் செய்வதன் மூலமாக வீட்டின் முகவரி, ஜிபிஎஸ் அடிப்படையிலான முகவரி, உள்ளூர் வரி, சொத்து வரி, தண்ணீர் பில் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்றும் இந்தூர் மேயர் கூறினார்.
June 30, 2025 6:11 PM IST

