அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை குறிப்பிட்டு பெண் அதிகாரிகளை பாலியல் வலையில் வீழ்த்தினாரா பாஜக மாநில துணை தலைவர்? உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார்.
8 மணிநேர ஆபாச வீடியோவை எதிர் கட்சிகள் கொடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆபாச வீடியோ விவகாரத்தில் மகாராஷ்டிரா பாஜக துணை தலைவர் மற்றும் முன்னாள் எம்.பி. கிரித் சோமையாவிடம் விசாரணை நடத்த உயர்மட்டக்குழு அமைத்துள்ளனர். அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் அமைப்புகளை பயன்படுத்துவோம் என மிரட்டி, பெண் அதிகாரிகளை அவர் பாலியல் வலையில் சிக்க வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

