Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Dhanush: 'அவர் இறங்குனா CMதான்!' – கொட்டும் மழையில் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
Dhanush: 'அவர் இறங்குனா CMதான்!' – கொட்டும் மழையில் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டம்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை OMR இல் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தினரின் மகளிரணி நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார். இதற்காகக் கொட்டும் மழையிலும் தனுஷ் நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகள் காலை முதலே அந்தத் தனியார் கல்லூரியில் கூடி வருகின்றனர்.

அலங்கார வளைவுகள்
அலங்கார வளைவுகள்

தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? எனும் விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வரும் நிலையில், திடீரென தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்துக்கு தனுஷ் அழைப்பு விடுத்திருந்தார்.

கடந்த ஒரு மாதமாக தனுஷின் மன்றத்தில் மகளிரணியை உருவாக்கி உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. அப்படிச் சேர்க்கப்பட்ட பெண் உறுப்பினர்களையும் நிர்வாகிகளையும்தான் தனுஷ் இன்று சந்திக்கிறார்.

இதற்காக OMR இல் உள்ள தனியார் கல்லூரியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ‘மண்ணின் மைந்தனே…’, ‘தமிழ்த் தேசத்தின் தங்கமகனே…’, ‘எங்களின் எதிர்காலமே…’ என அரசியல் நெடி வீசும் வகையிலான அலங்கார வளைவுகளையும் போஸ்டர்களையும் கல்லூரியைச் சுற்றி வைத்திருந்தனர்.

தனுஶ் நற்பணி இயக்கத்தில் 58 மாவட்டங்கள் இருக்கின்றன. அந்த 58 மாவட்டங்களிலிருந்தும் சராசரியாக 30 பெண் நிர்வாகிகள் என மொத்தமாக 2500 பேர் வேன்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர். காலை முதல் மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையில் கல்லூரியின் அரங்கத்துக்கு வெளியே தனுஷின் ரசிகைகள் காத்திருந்தனர்.

காத்திருந்த ரசிகைகள் சிலரிடம் தனுஷ் அரசியலுக்கு வருவாரா எனப் பேச்சுக் கொடுத்து பார்த்தோம். தேனியிலிருந்து வந்திருந்த ரசிகை ஒருவர், ”சின்ன வயசுல இருந்தே தனுஷைப் பிடிக்கும். விஜய் அரசியலுக்கு வரும்போது தனுஷ் அரசியலுக்கு வரக்கூடாதா? இதுவரைக்கும் சினிமால பார்த்தவரை இனி நியூஸ் சேனல்ல பார்த்துக்குறோம். இறங்குனா அவர்தான் சி.எம்’ என ஒரே போடாகப் போட்டார்.

செங்கல்பட்டைச் சேர்ந்த இன்னொரு ரசிகை, ”அவர் படமெல்லாம் பார்ப்போம். அசுரன், கர்ணனெல்லாம் ரொம்ப பிடிக்கும். அவர் என்ன முடிவெடுத்தாலும் சப்போர்ட் பண்ணுவோம்” என்றார்.

மதுரையிலிருந்து மகளிரணி நிர்வாகிகளை அழைத்து வந்திருந்த மாவட்ட நிர்வாகி ஒருவர், ”அவர் உடனே அரசியலுக்கு வருவாரான்னு தெரியல. ஆனா, அதுக்கான அடிப்படையான வேலைகளை நாங்க இப்போ இருந்தே செஞ்சுக்கிட்டு இருக்கோம். நாளைக்கு என்ன வேணா நடக்கலாம்” எனப் பொடி வைத்துப் பேசினார்.

பெண் நிர்வாகிகளை மாவட்டம் மாவட்டமாகப் பிரித்து தனித்தனியாக பாஸ்களை வழங்கி மொபைல் போனை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு உள்ளே அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

திட்டம் தீட்டிய தனுஷ்? களத்தில் இறங்கிய நிர்வாகிகள் – மகளிரணி சந்திப்பின் பின்னணி என்ன?



.

Previous Post

‘டார்கெட் வுமன்’ – நிர்வாகிகளுக்கு தனுஷ் கொடுத்த அசைன்மெண்ட்; – மகளிரணி கூட்டத்தின் பின்னணி! – Dhanush’s ‘Target Women’ Assignment for Party Functionaries: Behind the Women’s Wing Meeting

Next Post

வாடகை வீட்டில் இருக்கிறீர்களா? உரிமையாளர் – வாடகைதாரர் உரிமைகள் என்ன? சட்டம் சொல்வது என்ன? – 6 / Rental House Rules: Landlord and Tenant Rights in Law

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாடகை வீட்டில் இருக்கிறீர்களா? உரிமையாளர் – வாடகைதாரர் உரிமைகள் என்ன? சட்டம் சொல்வது என்ன? – 6 / Rental House Rules: Landlord and Tenant Rights in Law

வாடகை வீட்டில் இருக்கிறீர்களா? உரிமையாளர் – வாடகைதாரர் உரிமைகள் என்ன? சட்டம் சொல்வது என்ன? - 6 / Rental House Rules: Landlord and Tenant Rights in Law

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In