Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை: அதிமுக மாநாடு குறித்து விமர்சனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 21, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை: மதுரை அதிமுக மாநாடு குறித்து விமர்சனம்
55
SHARES
88
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். மதுரையில் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாநாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூட்டத்தில் பேசியவர்கள் விமர்சித்தனர்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மதுரையில் நேற்று மாநில மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் நேற்று மாலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த மாவட்டச் செயலாளர்கள் பேசினர். அவர்கள் பேசியதாவது:

மதுரையில் பழனிசாமி நடத்தி வருவது மாநாடு இல்லை. அதுபண பலத்தை கொண்டு கூட்டப்படும் கூட்டம். மதுரையில் மீனாட்சியம்மன் கோயில்தான் உயரமானது. அதற்குமேல் ஹெலிகாப்டரில் மலர்களை தூவி இருக்கிறார்கள். இதன்மூலம் மீனாட்சியம்மனின் சாபத்துக்கு பழனிசாமி ஆளாகி இருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்து, அவரது சாபத்துக்கும் ஆளாகி இருக்கிறார். பழனிசாமி நடத்தும் மாநாட்டால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படவில்லை.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை முறையாக விசாரிக்காத திமுக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் அறிவித்து நடத்திய ஆர்ப்பாட்டம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த அளவுக்கு பழனிசாமியின் மாநாடு பேசப்படவில்லை.

பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து பிரதமருக்கு அருகில் அமர வைத்து, மாலை போட வைத்தார்களே என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது. தனது தலைமையில் 8 தேர்தல்களில் தோல்வியை தழுவிய பழனிசாமி, பிரதமர் மோடியையும் தோற்கடித்து விடுவாரோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. 2026 தேர்தலில் ஓபிஎஸ்ஸை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு மாவட்ட செயலாளர்கள் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், ஐயப்பன், முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

.

Tags: அதமகஆலசனஓபஎஸகறததசயலளரகளடனமதரமநடமவடடவமரசனம
Previous Post

2-ம் சுற்று கலந்தாய்வில் மேலும் 20 இடங்கள் ஒதுக்கீடு: மருத்துவம் படிக்கும் அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை 642 ஆக அதிகரிப்பு

Next Post

மாணவர்களா?. மானங்கெட்டவர்களா.? பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனிதக் கழிவை பூசிய பிளஸ்-2 மாணவர்கள் இருவர் கைது.. பிறகு விடுதலை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனிதக் கழிவை பூசியது தொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் இருவர் கைது

மாணவர்களா?. மானங்கெட்டவர்களா.? பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனிதக் கழிவை பூசிய பிளஸ்-2 மாணவர்கள் இருவர் கைது.. பிறகு விடுதலை!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இரண்டு அல்லது மூன்று மாவட்டச் செயலாளர்களை வைத்துக்கொண்டு ஒரு சில கட்சி நிர்வாகிகளையும் ஒரு சில உறுப்பினர்களையும் வைத்துக்கொண்டு இவர் கூட்டம் கூட்டி என்ன செய்வது என்றே தெரியாமல் ஆலோசனை செய்துள்ளார் இவர் எப்போதுமே முன்னாள் முதல்வர் தான்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In