Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இனி யாரும் இப்படி செய்யாதீங்க.. யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவர்.. பரிதாபமாக உயிரிழந்த பெண்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உயிரிழந்த பெண்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளத்தின் தாக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக பலர் முகத்தை ஒரே நாளில் வெள்ளை ஆக்குவது எப்படி, உடல் எடையை ஒரு வாரத்தில் குறைப்பது எப்படி, முடி கொட்டுவதை ஒரே நாளில் தடுப்பது எப்படி என பல்வேறு யூடியூப் வீடியோக்கள் பார்த்து அதனை முயற்சி செய்து பல விளைவுகளை சந்திக்கின்றனர்.

மேலும், அண்மைக்காலமாக பொதுமக்களிடையே இயற்கை மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அலோபதி என்னும் ஆங்கில மருத்துவம் மீது நம்பிக்கை இல்லாத சிலர், பிரசவம் உள்பட இயற்கை வழி மருத்துவத்தை நாடி வருகின்றனர். இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களை நாடாமல் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்த்து அதில் வழங்கப்படும் குறிப்புகளை கொண்டு தாங்களாகவே தங்களுக்கு மருத்துவம் செய்து கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

 பல்வேறு கடுமையான நோய்களுக்கும் சமூக வலைதளத்தை பார்த்து தாங்களாகவே மருத்துவம் செய்து கொள்ளும் அவலம் நிலவி வருகிறது. தற்போது அப்படியொரு அவல நிலைதான் தர்மபுரியில் அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (27). இவருக்கும், போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகிக்கும் (27) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இருவரும் வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள். இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

இந்த நிலையில் லோகநாயகி கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான லோகநாயகி கணவரிடம் வீட்டிலேயே அதுவும் இயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி இயற்கை முறையில் எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது? என்பது குறித்து கணவன்-மனைவி இருவரும் யூடியூப் மூலம் பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே இருவரும் பேசிக்கொண்டபடி யூடியூப் பார்த்து மாதேஷ் தன்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் லோகநாயகிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது திடீரென அவருக்கு ரத்தப்போக்கு அதிகமானது.

சிறிது நேரத்தில் மயக்க நிலைக்கு சென்ற லோகநாயகியை போச்சம்பள்ளியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் லோகநாயகி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாதேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள போதிலும், பலரும் அதனை கண்டுகொள்ளாமல் இயற்கை முறையில் பிரசவம் என்ற பெயரில் தங்களது விருப்பத்திற்கு செயல்படுவதால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

.

Tags: Crimeஇபபடஇனஉயரழநதகணவரசயயதஙக.பணபரசவமபரததபரதபமகயடயபயரம
Previous Post

குடிபோதையில் இப்படியுமா..6 வயது மகனை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தை!

Next Post

பணம் கொட்டப்போகுது: குரு வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பணம் கொட்டப்போகுது: குரு வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்

பணம் கொட்டப்போகுது: குரு வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In