2018, தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராசு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்டபங்கள் சேதமடைந்து வருகின்றன. இவற்றைப் பழைமை மாறாமல் சீரமைத்துப் பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுத்தாக்கல் செய்தார்.
ஆறாண்டுகளுக்குப் பிறகு மார்ச் 11ல் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி வழங்கிய தீர்ப்பில், ‘தாமிரபரணியில் உள்ளாட்சிகளின் கழிவுநீர் கலக்கக் கூடாது.
