ஜாதிவாரிகணக்கெடுப்பை வலியுறுத்தி திசையன்விளை யில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
திசையன்விளை யில் காங்கிரஸ் ஓபிசி பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் ஜாண் கென்னடி தலைமை யில் நடந்தது. நகர காங்கிரஸ் தலைவர் ஏவிஜே.அல்பர்ட் முன்னிலை வகித்தார். புதிதாக நியமிக்க பட்ட மாவட்ட ஓபிசி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் மருதூர் மணிமாறன் ஓபிசி பிரிவில் உள்ள பெரும்பாலான ஜாதி மக்கள் அவர்ளுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நலத்திட்ட ங்கள் முழுமையாக கிடைக்க இளம் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை யான ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் பற்றி உரையாற்றினார்.

நிகழ்ச்சி யில் மருதூர் மணிமாறனின் 75 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகள் மருதூர் மணிமாறனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினர். நிகழ்ச்சி யில் ராதாபுரம் கிழக்கு வட்டார தலைவர் அந்தோணி ராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் விஜய பெருமாள் , முன்னாள் கல்லூரி முதல்வர் பழனி, ஆர்ஜிபிஆர்ஏஸ் வட்டார தலைவர் ஜெயபாண்டி,,நகர செயலாளர் சங்கர், கொடி ஜெயராஜ் ,இளைஞர் காங்கிரஸ் அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


எதிர்க்கட்சியாய் இருக்கும்போது ஆலோசனை கூட்டம் நடத்துவதும் ஆளுங்கட்சி ஆகிவிட்டால் கண்டுகொள்ளாமல் விடுவதும் நம் அரசியல்வாதிகளின் அன்றாட பொழுதுபோக்கு அந்த பொழுதுபோக்கில் இதுவும் ஒன்றே