Last Updated:
“பாகிஸ்தான் வருத்தத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாகிஸ்தானின் வலியை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதியால் தாங்க முடியவில்லை ” பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் ரூ. 2,200 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தொடங்கிவைத்தார். நலத்திட்டங்களைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பாகிஸ்தான் வருத்தத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாகிஸ்தானின் வலியை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதியால் தாங்க முடியவில்லை. பயங்கரவாதிகளின் நிலையைக் கண்டு பாகிஸ்தான் அழுவதைப்போல், இங்கு காங்கிரஸும், சமாஜ்வாதியும் அழுகின்றன” எனப் பேசியுள்ளார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ”ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு நான் காசிக்கு வருவது இதுவே முதல் முறை. பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவிப் பொதுமக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். என் இதயம் துக்கத்தால் நிறைந்திருந்தது. என் மகள்களின் குங்குமத்திற்கு (சிந்தூர்) பழிவாங்குவதாக நான் சபதம் செய்திருந்தேன், மகாதேவின் ஆசிர்வாதத்துடன் அதை நிறைவேற்றினேன். சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை மகாதேவின் பாதங்களில் அர்ப்பணிக்கிறேன்.
பாகிஸ்தான் வருத்தத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாகிஸ்தானின் வலியை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதியால் தாங்க முடியவில்லை. பயங்கரவாதிகளின் நிலையைக் கண்டு பாகிஸ்தான் அழுவதைப்போல், இங்கு காங்கிரஸும், சமாஜ்வாதியும் அழுகின்றன.
நமது பாதுகாப்புப் படை வீரர்களின் வலிமையை தொடர்ந்து காங்கிரஸ் அவமதித்துவருகிறது. ஆபரேஷன் சிந்தூரை நகைச்சுவை என அழைத்த காங்கிரஸுக்குச் சற்றும் குறைவில்லாதது சமாஜ்வாதி.
#WATCH | Varanasi, UP: Prime Minister Narendra Modi says, “Everyone understands that Pakistan is upset. But Congress and the Samajwadi Party cannot handle the pain that Pakistan is going through. Pakistan is crying, and here, Congress and SP are crying, seeing the condition of… pic.twitter.com/y861CEtnBE
— ANI (@ANI) August 2, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் குறிப்பிட்ட அன்றைய தினம் ஏன் கொல்லப்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர்கள் கேட்கிறார்கள். பயங்கரவாதிகளைக் கொல்ல நாம் காத்திருக்க வேண்டுமா என்ன? அவர்கள் தப்பி ஓட ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டுமா? ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் இருக்கும் சிந்தூர் என்பதில் அவர்களுக்குப் பிரச்சனை இருக்கிறது” எனப் பேசியுள்ளார்.
August 02, 2025 1:07 PM IST
“பாகிஸ்தான் வலியில் இருப்பதை காங்கிரஸால் தாங்க முடியவில்லை” – வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு

