இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. நான் எப்படித் தேர்தலில் போட்டியிடுவது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் கிட்டத்தட்ட 20 முதல் 30 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
மொத்தம் சுமார் 65 லட்சம், அதாவது சுமார் 8.5 சதவிகித வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் விளம்பரத்தை வெளியிடும்போதெல்லாம், பலர் இடம்பெயர்ந்துவிட்டனர், பலர் இறந்துவிட்டனர், பலர் போலி பெயர்களைக் கொண்டிருந்தனர் என்று குறிப்பிடுகின்றனர்.
ஆனால், தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கிய பட்டியலில் புத்திசாலித்தனமாக, எந்த வாக்காளரின் முகவரியையும், பூத் எண்ணையும், EPIC எண்ணையும் கொடுக்கவில்லை.
இதனால் வாக்காளர் பட்டியலிலிருந்து யாருடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முடியாது” என்று கூறினார்.

இருப்பினும், தேஜஸ்வி யாதவ்வின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம், “வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ள வரிசை எண் 416 மற்றும் EPIC எண் RABO456228.
அவர் தனது பழைய EPIC எண்ணைப் பயன்படுத்தித் தேடியிருக்கலாம், அதனால் தனது விவரங்களை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.” கூறியிருக்கிறது.
