Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஸ்டாலினுக்கு மோடியை விமர்சிக்கும் தகுதி இல்லை: அண்ணாமலை ஆவேசம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 18, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி இல்லை: அண்ணாமலை ஆவேசம்
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை:ராமேஸ்வரமும் காசியைப் போல விரைவில், உலகப் புகழ்பெற்ற தலம் ஆகும். வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற பிரதமர் நரேந்திர மோடி, திமுககாரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“திமுகவின் குடும்ப ஆட்சி பயிற்சிப் பாசாறையில், வழக்கம்போல, யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டைப் பார்த்து, அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாமல் கடகடவென்று ஒப்பித்துவிட்டுப் போயிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். 1964-ஆம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரைச் சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடிதான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதை தெளிவாக ஒப்புக் கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். 1964க்குப் பிறகு பலமுறை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக மருமகனுக்கும், பேரனுக்கும், மகளுக்கும் மத்திய அமைச்சர் பதவியும், எம்பி பதவியும் வாங்கிக் கொடுப்பதில் மட்டுமே குறியாக இருந்ததால், தமிழக மக்களின் பிரச்சினை குறித்துப் பேசவோ செயல்படவோ நேரமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறியதற்கு நன்றி முதல்வரே.

துண்டுச் சீட்டில் எழுதியிருப்பது என்னவென்று தெரியாமல் மேடைக்குப் பேச வந்தால், இப்படித்தான் பல ஒப்புதல் வாக்குமூலங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.தமிழக மீனவ சகோதரர்கள் மீது அக்கறை உள்ளது போன்ற முதல்வரின் நடிப்பு அவரது மகன் அமைச்சர் உதயநிதி நடிப்பை விஞ்சிவிட்டது. 2004-2014 பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணியில் பசையான துறைகளை வாங்கிக் கொண்டு நாள்தோறும் மீனவ சகோதரர்கள் தாக்கப்பட்டபோதும், கொல்லப்பட்டபோதும், அன்றைய வருமானக் கணக்கில் மட்டுமே முழு கவனத்தையும் வைத்திருந்த உங்கள் நீலிக் கண்ணீரை எல்லாம் மக்கள் நம்பிய காலம் முடிந்து போய்விட்டது.

உங்கள் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். பொதுமக்கள் மத்தியில் அதே துண்டுச் சீட்டு இனியும் எடுபடாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். புயலில் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு பிரதமர் மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பிரதமர் மோடிதான்.

1967 ஆம் ஆண்டிலிருந்து ஆறு முறை தமிழகத்தில் ஆட்சியிலிருந்தும், மத்திய அரசில் பலமுறை அமைச்சர் பதவி வகித்தும், உங்களால் தனுஷ்கோடிக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்க முடியவில்லை என்பது உங்களுக்கே வெட்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரவை எல்லாம் கேட்டுப் பெறத் தெரிந்த உங்களுக்கு 1964-ல் புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி ஞாபகம் வராதது அதிசயமே.

பிரதமர் நரேந்திர மோடி, மீனவ சகோதரர்களுக்காக, தனி துறையை அமைத்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கிஸான் திட்டம், காப்பீட்டுத் திட்டங்கள், தமிழக மீனவர் நலன் காக்க ரூ.2820 கோடிக்கும் அதிகமான நிதி, மீன்வளத் துறைக்கு செலவிடப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா? மீனவ மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம், மீனவளக் கல்லூரி அமைப்போம், குளிர்பதனக் கிடங்கு வசதி அமைப்போம், தடைக்கால நிவாரணம் 8000 ரூபாய் வழங்குவோம் என உங்கள் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா?

பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் உங்கள் கூட்டணியைப் போன்ற மக்கள் விரோத சக்திகளைத் தாண்டி, முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ராமேஸ்வரமும் காசியைப் போல விரைவில், உலகப் புகழ்பெற்ற தலம் ஆகும். வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற அவர் திமுககாரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும். மண்டபத்தில் யாரோ என்னவோ எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்துவிட்டுச் செல்வது அந்தத் தகுதி அல்ல. நீங்கள் வகிக்கும் பதவிக்கும் அது அழகல்ல. அடுத்த முறையாவது, துண்டுச் சீட்டை அப்படியே ஒப்பிக்கும் முன்பாக அதில் இருப்பது திமுகவுக்கு எதிரான ஒப்புதல் வாக்குமூலமா என்பதை சரிபார்க்கவும்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடந்த மீனவர்கள் நல மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் எப்போது துவங்கியதோ, அப்போதிலிருந்தே தமிழக மீனவர்களைத் தாக்குவதை இலங்கை அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. அதன்பிறகாவது தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடிகிறதா என்றால், அதுவும் இல்லை. அதே கைது, தாக்குதல், சித்ரவதை தொடரத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக 2014-ல் ஆட்சி மாற்றம் நடந்தது. பாஜக ஆட்சி அமைந்த பிறகுதான் அடக்குமுறைகள் இன்னும் அதிகமாகியிருக்கிறது.

மீனவர்கள் கைது, தாக்குதல், சிறைச்சாலை என்பதை தாண்டி, மீனவர்களினுடைய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் அந்த படகுகளை இலங்கை அரசாங்கம் பறித்துச் செல்வது அதிகமாகியிருக்கிறது. மீனவர்களை விடுவித்தாலும் படகுகளை தருவதில்லை. மீனவர்களுக்கு வாழ்வாதாரமே படகும் வலையும்தான். படகுகளை உடைப்பதும், வலைகளை அறுப்பதும் இலங்கை அரசின் வழக்கமாக உள்ளது. இத்தகைய படகுகள் இலங்கை அரசின் உடைமையாகும் என்று சொல்லுமளவுக்கு இப்போது நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது” என்று பேசியிருந்தார்.

.

Tags: அணணமலஆவசமஇலலதகதபரதமரமடயமதலவரவமரசககமஸடலனகக
Previous Post

மகனின் காதல் திருமணத்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி.

Next Post

இந்தியாவின் முதல் 3D அச்சிடப்பட்ட தபால் அலுவலகம் – பெங்களூரில் திறப்பு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவின் முதல் 3D அச்சிடப்பட்ட தபால் அலுவலகம் – பெங்களூரில் திறப்பு.

இந்தியாவின் முதல் 3D அச்சிடப்பட்ட தபால் அலுவலகம் - பெங்களூரில் திறப்பு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In