நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பாராலிம்பிக்ஸ் வீரர் பிரவீண் குமார் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் (பாரா தடகளம்), நித்யா ஸ்ரீ சுமதி சிவன் (பாரா-பேட்மிண்டன்), மனிஷா ராமதாஸ் (பாரா-பேட்மிண்டன்) ஆகியோருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
