Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விருதுநகர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
விருதுநகர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: விருதுநகரில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், வ.புதுப்பட்டி கிராமம் அருகில் இன்று (30-10-2023) மாலை வத்திராயிருப்பிலிருந்து வ.புதுப்பட்டி கிராமத்திற்கு அர்ச்சுனாபுரம் கிராமம் வழியாக மாதவாராயன்குளம் கண்மாய் அருகில் சென்று கொண்டிருந்த சிற்றுந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் உள்ள தென்னந்தோப்பில் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் நந்தகுமார், த/பெ.இருளப்பன் மற்றும் பாண்டி (எ) தேவேந்திரன் த/பெ. சின்னப்பராஜ் ஆகிய இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

.

Tags: அறவபபஉயரழநதவரகளனகடமபததககசலதலநதயதவ.மதலவரர.2லடசமவபததலவரதநகர
Previous Post

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் மறுப்பு – ஆளுநர் மீது வழக்கு போட்ட தமிழ்நாடு அரசு..!

Next Post

திருவான்மியூரில் பெயின்டர் கொலை: காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருவான்மியூரில் பெயின்டர் கொலை: காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்

திருவான்மியூரில் பெயின்டர் கொலை: காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    விபத்து நிவாரணம் தல 2 லட்சம் வழங்கியது ஆறுதலான செய்தி ஆனால் மீண்டும் இதுபோன்ற விபத்துக்கள் மரணங்கள் ஏற்படாதவாறு அங்குள்ள அரசு அலுவலர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் எல்லாவற்றையுமே முதலமைச்சரும் அமைச்சர்களும் வந்து பார்க்க இயலாது அப்படி என்றால் அங்குள்ள அரசு அலுவலர்கள் எதற்கு தண்ட சம்பளமா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In