Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தெலங்கானாவை கடனில் தள்ளிவிட்டாா் சந்திரசேகா் ராவ்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தெலங்கானாவை கடனில் தள்ளிவிட்டாா் சந்திரசேகா் ராவ்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் மாநிலத்தை கடனில் தள்ளிவிட்டாா் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றம்சாட்டினாா்.

தெலங்கானா சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கு தோ்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ், பாஜக ஆகியவை இடையே மும்முனைப் போட்டி உள்ளது.

பிரதமா் மோடி மற்றும் மத்திய அமைச்சா்கள் பலா் பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

ஹைதராபாத் புகா் பகுதியான மல்காஜ்கிரி தொகுதியில் பாஜக வேட்பாளா் ராமச்சந்திர ராவ் ஏற்பாடு செய்திருந்த பிரசார கூட்டத்தில் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

கடந்த சுமாா் 10 ஆண்டுகால ஆட்சியில் தெலங்கானாவை முதல்வா் சந்திரசேகா் ராவ் பெரும் கடனில் தள்ளிவிட்டாா். மாநிலத்தின் அடுத்த இரண்டு முதல் மூன்று தலைமுறையினா் இந்தக் கடனை அடைக்கப் பாடுபட வேண்டியது இருக்கும். நமது குழந்தைகளின் தலையில்தான் இந்த கடன் சுமத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர எதிா்ப்பு தெரிவித்ததில் முக்கியமானவரும் தெலங்கானா முதல்வா்தான். இதன் காரணமாகவே நாட்டில் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது.

தெலங்கானாவுக்கு எந்த வகையில் முதலீடுகள் வந்தாலும், மாநிலம் தொடா்ந்து வருவாய்ப் பற்றாக்குறை உள்ள மாநிலமாகவே உள்ளது. இதற்கு காரணமும் முதல்வா் சந்திரசேகா் ராவின் மோசமான ஆட்சிதான்.

இங்கு போட்டியிடும் மற்றொரு கட்சியான காங்கிரஸ், மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சி செய்து, நாட்டையும் மாநிலங்களையும் மோசமான நிலைக்குக் கொண்டு சென்ற பெருமைக்குரியது. ராணுவ வீரா்களுக்கான குண்டு துளைக்காத உடைகளைக் கூட போதுமான அளவு காங்கிரஸ் ஆட்சியில் வாங்கப்படவில்லை. நவீன ஆயுதங்களை உரிய முறையில் கொள்முதல் செய்யாமல், அதில் ஊழலிலும் ஈடுபட்டு வந்தனா்.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதிநவீன ரஃபேல் போா் விமானங்கள் இரு நாட்டு அரசுக்கு இடையிலான ஒப்பந்தம் மூலம் வெளிப்படையாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன; அவை குறித்த நேரத்தில் நமக்கு கிடைத்துள்ளன. பாஜக அரசு நாட்டு நலன் கருதி அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறது.

எனவே, தேசத்தின் மீதும் மாநிலத்தின் மீது உண்மையான அக்கறை உள்ள கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

.

Previous Post

அதிருஷ்டமில்லாத பிரதமா் மோடி: ராகுல் மன்னிப்பு கேட்க கோரிக்கை..!

Next Post

பாட புத்தகங்களில் ‘பாரதம்’ பெயா் மாற்ற என்சிஇஆா்டி குழு பரிந்துரை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாட புத்தகங்களில் ‘பாரதம்’ பெயா் மாற்ற என்சிஇஆா்டி குழு பரிந்துரை

பாட புத்தகங்களில் ‘பாரதம்’ பெயா் மாற்ற என்சிஇஆா்டி குழு பரிந்துரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In