Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஓசூரில் பதற்றம்..! – தீவிரமடையும் காவிரி போராட்டம்..! – DKS வைத்த வேண்டுகோள்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஓசூரில் பதற்றம்..! – தீவிரமடையும் காவிரி போராட்டம்..! – DKS வைத்த வேண்டுகோள்..!
16
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஓசூர் : தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. 15 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று வாரியத்தின் உத்தரவையும் மதிக்காத கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என அறிவித்தது. காவிரி ஆணையம் 5,000 கன அடி கண்டிப்பாக திறக்க வேண்டும் என உத்தரவிட அதன்பிறகு திறந்தது.

காவிரி தொடர்பான வழக்கில் தங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதும் அதற்கு ஒரு காரணம். ஆனால், காவிரி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி மேலண்மை ஆணையத்தின் உத்தரவுகளில் தலையிட முடியாது எனக் கூறியதோடு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு கர்நாடகம் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

பற்றவைத்த பாஜக : கர்நாடகாவில் இருந்து சொட்டு காவிரி நீரைத் தரவே கூடாது என முதன் முதலில் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது கர்நாடகா பாஜகதான். இதனைத் தொடர்ந்தே கன்னட விவசாயிகள் களத்தில் குதித்தனர். கர்நாடகா அரசியலுக்காக பாஜக பற்ற வைத்த நெருப்பு இன்று விவசாயிகளை வீதியில் இறக்கி விட்டுள்ளது. மண்டியாவில் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டம் நடத்திய விவசாயிகள் உச்சநீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவைத் தொடர்ந்து உக்கிரமாகி உள்ளனர்.

கன்னட நடிகர்கள் ஆதரவு : மாண்டியா, மைசூர், பெங்களூர் நகரங்களில் பல்வேறு கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு கன்னட நடிகர், நடிகைகள் ஆதரவை தர தொடங்கி உள்ளனர்.

மண்டியா போராட்டத்தில் அப்பகுதியில் பெரும்பான்மையினராக இருக்கும் ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி பங்கேற்க உள்ளதாகவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பெங்களூர் நகரத்துக்கு குடிநீர் வழங்கக் கூடிய நிலையத்தையும் பொதுப் பணித்துறை அலுவலகங்களையும் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். மேலும் கொடும்பாவிகளை கொளுத்தியும் டயர்களையும் எரித்தும் சாலை மறியல் போராட்டத்தை நடத்துகின்றனர்.

பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலை போராட்டங்களால் பதற்றமடைந்திருக்கிறது. கர்நாடக விவசாயிகளுடன் கன்னட ரக்‌ஷன வேதிகே போன்ற கன்னடர் இன அமைப்புகளும் இணைந்திருப்பதால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளனர். இதனையடுத்து இரு மாநில எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாண்டியா மாவட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக இன்று முழு அடைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆட்டோ மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள், “கர்நாடகத்திற்கு குடிக்கவே தண்ணீர் இல்லை, தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும், உச்சநீதிமன்றம் உண்மை நிலையை தெரிந்துகொள்ள் வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில் கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், “அரசியல் கோணத்தில் சிலர் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். கர்நாடக விவசாயிகளின் நலன் காக்க நாங்கள் இருக்கிறோம். யாரும் சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கிறோம். முழு அடைப்பில் ஈடுபட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். கர்நாடகாவின் நலன்களை பாதுகாக்கவே நாங்கள் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Previous Post

நிபந்தனையற்ற மன்னிப்புக் கோராவிட்டால் திமுக ஐடி விங்க் மீது வழக்கு தொடரப்படும்: ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை..!

Next Post

அதிரவைக்கும் வீடியோ – விநாயகர் ஊர்வலத்தில் அராஜகம்..! – இளைஞருக்கு கத்தி குத்து!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிரவைக்கும் வீடியோ – விநாயகர் ஊர்வலத்தில் அராஜகம்..! – இளைஞருக்கு கத்தி குத்து!

அதிரவைக்கும் வீடியோ - விநாயகர் ஊர்வலத்தில் அராஜகம்..! - இளைஞருக்கு கத்தி குத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In