Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 21.69 லட்சம் பேர் காசநோயால் பாதிப்பு…!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 6, 2024
in அரசியல் செய்திகள்
0
2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 21.69 லட்சம் பேர் காசநோயால் பாதிப்பு…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்திய அரசின் சமீபத்திய அறிக்கையின்படி, 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை 21.69 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசநோய் (TB) இந்தியாவில் ஒரு சுகாதார சவாலாக உள்ளது. நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இந்த கொடிய நோயால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர்.

இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற அரசுகள் நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் இன்னும் நிலைமை சீரடையவில்லை. அறிக்கைகளை பார்த்தால், உலகிலேயே இந்தியாவில்தான் அதிக நோயாளிகள் உள்ளனர் என்பது தெரிய வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை சுமார் 21.69 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் காசநோய் இன்னும் ஒரு பெரிய சுகாதார சவாலாக உள்ளது என்பதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது.

விளம்பரம்

2020ஆம் ஆண்டில், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.05 லட்சமாக இருந்தது. இது 2023இல் 25.52 லட்சமாக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில், இந்தியாவில் 21.69 லட்சம் பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகரிப்பு இருந்தபோதிலும், தடுப்பு மற்றும் சிகிச்சைத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் (NTEP) கீழ், இந்தியாவை காசநோய் இல்லாததாக மாற்ற குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று படேல் கூறினார். உலகளாவிய இலக்கான 2030ஐ விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, அதாவது 2025க்குள் காசநோயை அகற்றுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்தியாவின் பெரிய நகரங்களில் நிகழும் 78% சாலை விபத்துகள்… காரணம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…

2015இல் 1,00,000 மக்கள் தொகையில் 237 பாதிப்புகள் இருந்தன. இது 2023இல் 195ஆகக் குறைந்துள்ளது. இறப்பு விகிதமானது 2015இல் 1,00,000 மக்கள்தொகையில் 28ஆக இருந்து, 2023இல் 22ஆக குறைந்துள்ளது. அரசின் திட்டங்கள் மூலம் படிப்படியாக தங்கள் இலக்குகளை அடைவதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதற்காக, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTEP) கீழ் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று படேல் கூறியுள்ளார்.

விளம்பரம்

காசநோயை ஒழிக்க NTEPஇன் கீழ் அரசாங்கம் பல திட்டங்களையும், தலையீடுகளையும் செயல்படுத்தியுள்ளது. அதை பற்றி விரிவாக பார்ப்போம்:

  • மாநில மற்றும் மாவட்ட அளவில் குறிப்பிட்ட ஸ்ட்ராட்டஜிக் பிளான்கள் மூலம் அதிக காசநோய் உள்ள பகுதிகளில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

  • காசநோயாளிகளுக்கு இலவச மருந்துகள் மற்றும் நோய் கண்டறிதல் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற வைட்டமின்-பி நிறைந்த 6 காய்கறிகள்.!


இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற வைட்டமின்-பி நிறைந்த 6 காய்கறிகள்.!

  • மாலிக்குலர் டியக்னோஸ்டிக் லேப்கள் துணை மாவட்ட அளவில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.

  • நிக்ஷய் போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

  • காசநோய்க்கான அறிவிப்பு மற்றும் நிர்வாகத்தை மேற்கொள்ள தனியார் சுகாதார மையங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.

.



.

Previous Post

பிங்க் பந்து கிரிக்கெட்டில் சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்..!

Next Post

‘அம்பேத்கர் வழியில் பயணித்து, தமிழ்தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்’

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஜய்யின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்: சீமான்

'அம்பேத்கர் வழியில் பயணித்து, தமிழ்தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In