தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்டம், மேலூர் தொகுதி தி.மு.கழகத்தின் சார்பில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று காலை 7 மணி அளவில் மேலூர்- சிவகங்கை சாலையில் நடைபெற்றது. முதலில் பெரிய மாட்டுவண்டிக்கான போட்டி நடைபெற்றது. இதில் 13 மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போக வர 9 மைல் தூரம் இந்த பந்தயத்தை தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான பி.மூர்த்தி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரிய மாட்டில் திருநெல்வேலி மாவட்டம், டாக்டர். சொ. சுப்பையா பாண்டியன் நினைவாக சீவலப்பேரி துர்காம்பிகா முதல் பரிசு ரூ. 2,00,071 ம், மதுரை மாவட்டம், ஆரப்பாளையம் ஆனந்த், கேரளா வி.எம்.பிரேம் பிரதர்ஸ்,இரண்டாம் பரிசு ரூ.1,50,071 – ம் மதுரை மாவட்டம், அவனியாபுரம் மோகன் சாமிகுமார் மூன்றாம் பரிசு ரூ.1,00,071-ம், தூத்துக்குடி மாவட்டம், சண்முகாபுரம் மெடிக்கல் விஜயகுமார் நான்காம் பரிசு ரூ.30,071-ம் வெற்றி பெற்றன.
நடுமாட்டுவண்டி போட்டியில் 25 ஜோடிகள் கலந்துகொண்டன. ராமநாதபுரம் மாவட்டம், சித்திரங்குடி ஆர்.ஜி.ஆர் குலசாமிகள் துணை முதல் பரிசு ரூ. 1,00,071-ம், திருநெல்வேலி மாவட்டம், டாக்டர். சொ. சுப்பையா பாண்டியன் நினைவாக, சீவலப்பேரி துர்காம்பிகா இரண்டாம் பரிசு ரூ. 75,071-ம், மதுரை மாவட்டம், பல்லவராயன்பட்டி அழகுத் தேவர் நினைவாக வர்ஷா இளமாறன்
மூன்றாம் பரிசு ரூ. 50,071-ம் தூத்துக்குடி மாவட்டம், துரைச்சாமிபுரம் சுரேஷ்குமார் பேக்கரி நான்காம் பரிசு ரூ. 20,071-ம் வெற்றிபெற்றன.
அதனைத் தொடர்ந்து சிறிய மாட்டு பந்தயத்திற்கான போட்டி நடைபெற்றது.
இதில் 56 ஜோடிகள் கலந்து கொண்டன. இரண்டு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது.சிறிய மாட்டிற்கு என பந்தய தூரம் 6 மைல் தூரம்
சின்ன மாடு முதல் சுற்று 28 வண்டிகள் கலந்துகொண்டன. தூத்துக்குடி மாவட்டம், குமரெட்டியாபுரம் ஸ்ரீ மகாவிஷ்ணு முதல் பரிசினையும்,
திருநெல்வேலி மாவட்டம், டாக்டர். சுப்பையா பாண்டியன் நினைவாக சீவலப்பேரி துர்காம்பிகா இரண்டாம் பரிசினையும், மதுரை மாவட்டம் அயிலாங்குடி மலைச்சாமி கோனார் நினைவாக பதினெட்டாங்குடி அன்சிகா மோனிஷ் மூன்றாம் பரிசினையும், மதுரை மாவட்டம், மேலவளவு பன்னீர்செல்வம் அம்பலம் நினைவாக, குமனம் தொழு அஷ்வந் நான்காம் பரிசினையும் வென்றன.
சிறிய மாடு இரண்டாவது சுற்று மாட்டு வண்டி பந்தயத்தில் 28 ஜோடிகள் கலந்து கொண்டன.
மதுரை மாவட்டம் புதுப்பட்டி சின்னசாமி அம்பலம் நினைவாக, சிவபாலன் மேலூர் சிக்கி முதல் பரிசினையும், ராமநாதபுரம் மாவட்டம், சித்திரங்குடி ஆர்.ஜி.ஆர் குலசாமிகள் துணை இரண்டாம் பரிசினையும், தேனி மாவட்டம் கம்பம் ரஹீம் ராவுத்தர் மூன்றாம் பரிசினையும், சிவகங்கை மாவட்டம் அதிகரை வேங்கை சேர்வை நினைவாக, மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மேலூர் கே.ஆர்.அழகு பாண்டி நான்காம் பரிசினையும் வென்றது.
வெற்றிபெற்ற மாட்டிற்கான அனைத்து பரிசு தொகையினையும், வெற்றி கோப்பைகளையும் அமைச்சர் மூர்த்தி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மேலூர் நகர்மன்ற தலைவரும்,நகர் செயலாளர் முகமது யாசின், மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் நேரு பாண்டியன், மாவட்ட சேர்மன் சூர்யா கலா கலாநிதி, ஆனையூர் பகுதி கழகச் செயலாளர் மருதுபாண்டி, கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபேதா பேகம் அப்பாஸ், வல்லாளப்பட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மேலூர் யூனியன் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மேலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திர பிரபு, கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் பழனி(மேற்கு) ராஜராஜன் (தெற்கு) கிருஷ்ணமூர்த்தி (கிழக்கு), வல்லாளபட்டி பேரூராட்சி செயலாளர் கார்த்திகேயன், நகர் நிர்வாகிகள் ரவி, ரமேஷ், முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, முன்னாள் நகர் மன்ற தலைவர் கொன்னடியான், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் நாவினிபட்டி வேலாயுதம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணிசெயலாளர் தற்காகுடி சரவணன், மாநில தொழிற்சங்க துணை செயலாளர் அல்போன்ஸ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் அட்டப்பட்டி குமார், குமரேசன், எழில்வேந்தன், முருகானந்தம், சந்தோஷ் குமார், மற்றும் துணை தலைவர் கலைவாணன், மேலூர் நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், மாட்டுவண்டி போட்டியை காணரோட்டின் இரு புறமும் மாட்டுவண்டி ரசிக பெருமக்கள், இளைஞர்கள்,பொதுமக்கள் பார்த்து கண்டுகளித்தனர். மேலூர் நகர் அவை தலைவர் மார்க்கெட் ராஜேந்திரன் பந்தய ஏற்பாட்டை செய்திருந்தார்.
நகர்மன்ற துணை தலைவர் இளஞ்செழியன்,
மதுரை மாவட்ட காளை வளர்ப்போர் சங்க துணை தலைவர் ஏ.ஆர். இளமாறன் ஆகியோர் நன்றி கூறினர்.



