மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது கட்சி சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்ததை நியாயப்படுத்தி இருக்கிறார்.
அரசியல் கட்சிகளை உடைத்ததால்தான் மக்களவை தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் தோல்வி அடைய நேரிட்டதாக பொதுமக்கள் மத்தியில் பொதுவான ஒரு கருத்து இருக்கிறது. இது தொடர்பாக நிதின் கட்கரி அளித்த பேட்டியில், “‘பா.ஜ.க மற்ற கட்சிகளை உடைக்கும் அரசியலில் ஈடுபடவில்லை. சரத் பவார் தனது இளம் வயதில் இதைத்தான் செய்தார். காதல் மற்றும் அரசியலில் அனைத்தும் நியாயமானதுதான். சில நேரங்களில் அது மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. மற்ற நேரங்களில் எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது.
