அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் ஆளுநர் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
நியூயார்க் மாநகராட்சி மேயராக 34 வயதேயான ஜோஹ்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மீரா நாயரின் மகனான ஜோஹ்ரானின் இந்த வெற்றி டொனால்டு ட்ரம்புற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டொனால்டு ட்ரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது இத்தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. முதல் முறையாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபர் இப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பை மாநகராட்சிக்கும் வரும் ஜனவரி மாதம் மேயர் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் மேயராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “‘அமெரிக்காவில் நடந்திருப்பது வாக்கு ஜிஹாத் ஆகும்.
நியூயார்க் நகரில் காணப்பட்ட அதே வகையான அரசியலை மும்பையிலும் கொண்டுவர முயற்சி நடக்கிறது. எந்த கானையும் மும்பையில் மேயராக அனுமதிக்க மாட்டோம். இவ்விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் யாராவது கான்களைத் திணிக்க முயன்றால், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
