Last Updated:
அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேஷியா (70.5%) மற்றும் மியான்மர் (70.2%) ஆகிய நாடுகள் உள்ளன.
உலக புள்ளி விவர (World of Statistics) நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உலகளாவிய அளவிலான புதிய அறிக்கை ஒன்று, இந்தியாவில் 42% ஆண்கள் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை கொண்டிருப்பதாக ஒரு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த எண்ணிக்கை அதிக ஆண்கள் புகைப்பிடிக்கும் விகிதம் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை 13வது இடத்தில் வைத்திருக்கிறது. மேலும் இந்த அறிக்கை, ஆசிய கண்டம் முழுவதும் கலாச்சார மற்றும் சமூகப் பழக்கவழக்கங்களுடன் புகைப்பழக்கமும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேஷியா (70.5%) மற்றும் மியான்மர் (70.2%) ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் ஆண்கள் மத்தியில் காணப்படும் புகைபிடிக்கும் பழக்கம் இந்தியாவைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பொதுவானது. இவற்றுக்கு அடுத்து பங்களாதேஷ் (60.6%), சிலி (49.2%) மற்றும் சீனா (47.7%) ஆகிய நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிக ஆண்கள் புகைப்பழக்கம் கொண்டிருப்பதை அறிக்கை காட்டுகின்றது.
இந்த புதிய தரவானது உலகளவில் மற்ற கண்டங்களை ஒப்பிடும்போது ஆசிய ஆண்கள் அதிகமாக புகைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த புள்ளிவிவரங்களில் இடம்பெற்றுள்ள பல நாடுகளில் 10 ஆண்களில் 4க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து புகைப்பிடிப்பதாக அறிக்கை கூறுகிறது. அதிக ஆண்கள் புகைப்பிடிக்கும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்றாலும், 42% ஆண்கள் புகைப்பழக்கத்தோடு 13ஆவது இடத்தில் இருப்பது இன்னும் கவலைக்குரியதாகவே உள்ளது.
ஏனென்றால், 42% என்பது புகையிலைக்கு எதிரான நடவடிக்கைகள், பொதுக் கல்வி மற்றும் வரிவிதிப்பு ஆகியவற்றில் வெற்றி பெற்ற பிரான்ஸ் (36%), தென்கொரியா (38.2%) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (35.6%) போன்ற வளர்ந்த நாடுகளைவிட அதிகமாகும். அதிக ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியல் அடங்கிய வைரல் போஸ்ட் கீழே:
Share of men who smoke cigarettes.
🇮🇩 Indonesia: 70.5%
🇲🇲 Myanmar: 70.2%
🇧🇩 Bangladesh: 60.6%
🇨🇱 Chile: 49.2%
🇨🇳 China: 47.7%
🇿🇦 South Africa: 46.8%
🇬🇷 Greece: 45.3%
🇱🇰 Sri Lanka: 43.2%
🇲🇾 Malaysia: 42.7%
🇹🇭 Thailand: 42.5%
🇪🇬 Egypt: 42.3%
🇰🇿 Kazakhstan: 42.2%
🇮🇳 India: 42%
🇵🇭…— World of Statistics (@stats_feed) November 6, 2025
இந்தியாவின் பிரச்சனை சிகரெட் புகைப்பதைக் குறைப்பது மட்டுமல்ல, பீடி, மெல்லும் புகையிலை போன்ற பிற வகையான புகையிலை பயன்பாடும் ஆகும் என்று கூறும் நிபுணர்கள் இவற்றாலும் உடல்நல அபாயங்கள் அதிகரிப்பதாக குறிப்பிடுகின்றனர். சுகாதார எச்சரிக்கைகள் மற்றும் பொதுக் கல்வி பிரச்சாரங்களுடன் புகையிலை எதிர்ப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், குறிப்பாக கிராமப்புற மற்றும் குறைந்த வருமானம், குறைந்த கல்வித் திறன் கொண்ட SES மக்களிடம் புகையிலை சார்ந்த விழிப்புணர்வு இன்னும் தீவிரமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
மேற்கத்திய நாடுகள் படிப்படியாக சிகரெட்டுகளை ஒழித்துவரும் வேளையில், ஆசியா – குறிப்பாக இந்தியா – நிக்கோடின் போதைப் பழக்கத்தின் இறுகிய பிடியை எதிர்த்துப் போராடி வருகிறது. புகையிலை மற்றும் நிக்கோடினுக்கு எதிராக வலுவான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், புகையிலை பயன்பாட்டுடன் தொடர்புடைய புற்றுநோய், இதய நோய் மற்றும் சுவாச நோய் பாதிப்புகள் இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
November 06, 2025 5:41 PM IST
இந்தியாவில் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை கொண்டிருக்கும் 42% ஆண்கள்…! அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரம்…

