Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகர் கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 1, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகர் கொலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் ஜெகன்(34). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், பாஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்தார். கேடிசி நகரில் வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு மூளிக்குளம் சுடலைமாட சுவாமி கோயில் அருகில் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் ஜெகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த ஜெகன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார். ஜெகன் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெகனின் உறவினர்கள் மற்றும் பாஜகவினர் நேற்று பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திமுக பிரமுகரின் தூண்டுதலால் கொலை நடந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

.

Tags: கலபரமகரபளயஙகடடயலபஜக
Previous Post

பிரதமர் மோடி பற்றி ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்டுள்ள ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ நூல் – அண்ணாமலை பாராட்டு

Next Post

கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In