Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரில் மோசடி : பாஜக நிர்வாகி கைது..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 20, 2024
in Default
1
‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரில் மோசடி : பாஜக நிர்வாகி கைது..!
21
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சினேகம் பவுண்டேசன் பெயரில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமியை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 2022ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து தன்மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.‌ இது தொடர்பாக இருவரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய குற்றபிரிவு போலீஸார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை எதிர்த்து பாடலாசிரியர் சினேகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.‌ இதனை விசாரித்த நீதிமன்றம் சினேகன் மீது காவல் துறை பதிவு செய்த வழக்கை ரத்துச் செய்து உத்தரவிட்டது. மேலும் நடிகை ஜெயலட்சுமியிடம் விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நடிகை ஜெயலட்சுமி

நடிகை ஜெயலட்சுமி

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டி இன்று திருமங்கலம் போலீஸார் அண்ணாநகரில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர் வீட்டில் சோதனை நடத்திய போலீஸார், நடிகை ஜெயலட்சுமி ‘சினேகம் பவுண்டேசன்’ பெயரில் பணம் பெற்றதற்கான ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து போலீஸார் சினேகம் பவுண்டேசன் மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமியை போலீஸார் கைது செய்த சம்பவம் பாஜகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

வாக்குசீட்டுகளை தேர்தல் அதிகாரி சிதைத்த வழக்கு :AAP வேட்பாளர் வெற்றி: தேர்தல் அதிகாரி மீது வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் உத்தரவு..

Next Post

லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்டபோது கதறி அழுத பெண் அதிகாரி.. பல கோடிகள் பறிமுதல்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்டபோது கதறி அழுத பெண் அதிகாரி.. பல கோடிகள் பறிமுதல்..

லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்டபோது கதறி அழுத பெண் அதிகாரி.. பல கோடிகள் பறிமுதல்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    குற்றச் செயல்களிலும் மோசடி செயல்களிலும் ஈடுபடும் நபர்கள் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் பின்வாங்காமல் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து இது போன்ற நபர்களை சிறையில் தள்ள வேண்டும் அப்பொழுதுதான் ஏழை மக்களும் அப்பாவி மக்களும் வாழ முடியும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In