Last Updated:
நவம்பர் 22ஆம் தேதிக்கு முன்பாக பிகார் சட்டமன்றத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
பிகாரில் வேட்புமனுத் தாக்கல் கடைசி நாளுக்கு 10 நாட்கள் முன் வரை வாக்காளர் பட்டியலில் பெயரை, சேர்க்கவோ, நீக்கவோ செய்யலாம் என ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிகாரில் 2 நாள் ஆய்வுக்கு பின் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நவம்பர் 22ஆம் தேதிக்கு முன்பாக பிகார் சட்டமன்றத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்தார். ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங்களிலும் ஆயிரத்து 200 வாக்காளர்களுக்கு மிகாமல் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வேட்புமனுத் தாக்கல் கடைசி நாளுக்கு 10 நாட்கள் முன் வரை வாக்காளர் பட்டியலில் பெயரை, சேர்க்கவோ, நீக்கவோ செய்யலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறினார்.
October 05, 2025 8:31 PM IST

