பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரபல டிவி தொகுப்பாளரும் நடிகரும் உள்ளே செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிகழ்ச்சியாக மாறியிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பானது, இந்த நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களுக்கு கொண்டு சென்றது.
அந்த வகையில் கடைசியாக ஒளிப்பரப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசனின் வின்னராக சின்னத்திரை நடிகர் அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடன் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைக்கட்சியைச் சேர்ந்த விக்ரம் தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் விஜய் டிவி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் விரைவில் ஒளிப்பரப்ப உள்ளதாகவும் அதனை கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாகவும் அண்மையில் விஜய் டிவி அறிவித்தது. அது தொடர்பான புரமோவும் வெளியாகி வைரல் ஆனது.
இந்த நிலையில் இந்த சீசனில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்பது தொடர்பான கூடுதல் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
முன்னதாக வெளியான தகவல்களின் படி, பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 -ல் போட்டியாளராக களம் இறங்கியரச்சிதாவின் கணவர் தினேஷ் கோபாலசாமி, சர்ச்சைக்கருத்துக்களுக்கு பேர் நடிகை ரேகா நாயர், பப்லு பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்ஷனும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது. அக்டோபர் 2 வது வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பபடலாம் என்று தெரிய வந்திருக்கிறது.

