Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு-நாளொன்றுக்கு ரூ.500 கோடி இழப்பு – நெருக்கடியில் பின்னலாடை நிறுவனங்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 28, 2025
in அரசியல் செய்திகள்
0
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு-நாளொன்றுக்கு ரூ.500 கோடி இழப்பு – நெருக்கடியில் பின்னலாடை நிறுவனங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சந்தைகளை பாதிக்கும் காரணிகள்

இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் குமார் பேசுகையில்:
“திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியாளர்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.

1.முற்றிலும் அமெரிக்காவை மட்டுமே சார்ந்து இயங்கும் நிறுவனங்கள்.

2.அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள்.

3. அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள்.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால், அமெரிக்காவை மட்டும் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் நேரடியாக கடுமையான பாதிப்பைச் சந்திக்கும்.

அமெரிக்கா மற்றும் இதர சந்தைகளை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் குறைந்த அளவிலான பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.

அமெரிக்காவை சாராத நிறுவனங்களும் சிறிய அளவில் பாதிக்கப்படும். ஏனெனில் மேற்சொன்ன இருதரப்பும் அமெரிக்காவை தவிர்த்து மற்ற சந்தைகளை நோக்கிச் செல்லும்போது போட்டி உருவாகி விலை குறைப்பு மற்றும் ஆர்டர்கள் பிற நிறுவனங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் உருவாகும்.

குமார் துரைசாமி

குமார் துரைசாமி

பொருளாதார இழப்பு

அதுமட்டுமில்லாமல், ஆண்டுக்கு சுமார் ரூ. 2,000–2,500 கோடி அளவுக்கான பொருளாதார இழப்பும், ரூ. 5,000–7,000 கோடி அளவிலான வர்த்தக இழப்பும் நேரிட வாய்ப்பு அதிகம் உள்ளது.

24 மணி நேரமும் இயங்கி வரும் பின்னலாடை நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை குறைக்கத் தொடங்கி, பின் வேலை இழப்பு வரை செல்லும் அபாயமும் உள்ளது.

இது திருப்பூர் பின்னலாடைத் துறையை மட்டும் பாதிக்காது; ஒட்டுமொத்த மாவட்டத்தின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பையும் கேள்விக்குறியாக்கிவிடும்.

தொழிலாளர்கள் வேலை இழப்பதும், தாக்குப்பிடிக்க இயலாத தொழிற்சாலைகள் மூடப்படுவதும், தொழில் பின்னடைவு காரணமாக வரி வசூல் பாதிப்பும், வங்கிகளில் வாரா கடன்கள் அதிகரிப்பதும் போன்றவை நிகழும் அபாயம் உள்ளது.

மத்திய அரசு அமெரிக்க அரசுடன் பேசி விரைவில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்,” என்றார்.



.

Previous Post

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி! Chhattisgarh floods

Next Post

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In