வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
போபால்: தேர்தல் நெருங்கும் நேரத்தில் ம.பி., காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக, அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் பச்சோரி, முன்னாள் எம்.பி., கஜேந்திர சிங் மற்றும் பலர் பா.ஜ.,வில் இணைந்தனர்.
அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில தலைவர் விடி ஷர்மா ஆகியோர் முன்னிலையில் அவர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்.
சுரேஷ் பச்சோரி
ம.பி., மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் பச்சோரி. காங்கிரசில் முக்கிய பதவிகளை வகித்த இவர், இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். சோனியா குடும்பத்திற்கு நெருக்கமானவராக கருதப்பட்ட இவர், காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத்துறை இணையமைச்சராக பதவி வகித்துள்ளார். ராஜ்யசபா எம்.பி.,யாகவும் 4 முறை பதவி வகித்துள்ளார்.
மீண்டும் பா.ஜ.,
அதேபோல், முன்னாள் எம்.பி.,யான கஜேந்திர சிங், பழங்குடியினத்தை சேர்ந்த முக்கிய தலைவர் ஆவார். 1998, 1999 மற்றும் 2009ம் ஆண்டில் தார் தொகுதியில் இருந்து லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பா.ஜ.,வில் இருந்த இவர் 1990ல் அக்கட்சி சார்பில் எம்.எல்.ஏ.,ஆக தேர்வு செய்யப்பட்டார். பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர், தற்போது மீண்டும் பாஜ.,வுக்கு திரும்பி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னள் எம்.எல்.ஏ.,க்களான சஞ்சய் சுக்லா, அர்ஜூன் பாலியா, விஷால் படேல் உள்ளிட்டோரும் பா.ஜ.,வில் இணைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

