Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விமான பயணிகளிடம் மது போதையில் தகராறு செய்தவர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 17, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை | விமான பயணிகளிடம் மது போதையில் தகராறு செய்தவர் கைது
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ஓமனில் இருந்து சென்னை வந்த விமானத்தில், மது போதையில் சக பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்த பயணி சுரேந்தர் (34) என்பவர், விமானத்தில் மதுவை அதிக அளவில் வாங்கி அருந்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் மது போதையில் சக பயணிகளிடம் தகராறு செய்ததால், இதுகுறித்து விமானப் பணிப்பெண்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விமான பணிப்பெண்கள் எச்சரித்தும் அவர் கேட்காததால், விமானியிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, விமானி உடனடியாக சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, மது போதையில் இளைஞர் தொந்தரவு செய்வது குறித்து புகார் அளித்தார்.

அந்த விமானம் சென்னை விமான நிலையத்துக்கு வந்ததும், தகராறில் ஈடுபட்ட பயணியைப் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்துச் சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீஸார் சுரேந்தரைக் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

Tags: கதசயதவரசனனதகரறபதயலபயணகளடமமதவமன
Previous Post

தமிழக ஆளுநர் துரோகி.. புதுச்சேரி ஆளுநர் எதிரி – நாராயணசாமி காட்டம்

Next Post

10 நாட்களில் பிடிப்பட்ட 8 மலைப்பாம்புகள் – காப்புக்காடுகளில் விடுவித்த வனத்துறை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கிருஷ்ணகிரி | 10 நாட்களில் பிடிப்பட்ட 8 மலைப்பாம்புகள் - காப்புக்காடுகளில் விடுவித்த வனத்துறை

10 நாட்களில் பிடிப்பட்ட 8 மலைப்பாம்புகள் - காப்புக்காடுகளில் விடுவித்த வனத்துறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In