Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இயற்கை விவசாயிகளுக்கு பாராட்டு விழா: மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இயற்கை விவசாயிகளுக்கு பாராட்டு விழா: மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமை..!
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இராமநாதபுர மாவட்டம், கமுதியில் இயற்கை விவசாயம் மூலம் மிளகாய் ஏற்றுமதி செய்த விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
கமுதி அருகே உள்ள கோரைப்பள்ளம், பாக்குவெட்டி, கீழவலசை, மேட்டுப்பட்டி, செங்கப்படை, புதுக்கோட்டை, இடையங்குளம்,
ராமசாமிபட்டி, கூலிபட்டி, எம்.எம்.கோட்டை, நீராவி, கிளாமரம், காவடிபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் இயற்கையான முறையில், பூச்சி மருந்துகள் இல்லாமல், நாட்டுமாடுகள் மற்றும் ஆடுகளை கிடை போடச் செய்து, அவைகள் இடும் சானங்கள் மூலம் இயற்கை உரம் கிடைக்கப் பெற்று அதன் மூலம் சம்பா மிளகாய் விவசாயம் செய்து வருகின்றனர்.


முற்றிலும் பூச்சி மருந்துகள் இல்லாமல், நடைபெறும் இந்த விவசாயத்தில் கிடைக்கப் பெறும் சம்பா மிளகாய் மிளகாய் ஜெர்மனி, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சஸ் அக்ரி டெவலப்மென்ட் எனும் தனியார் நிறுவனம் மூலம் ஏற்றுமதி செய்ய படுகிறது. இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கபடும் இந்த சம்பா மிளகாய் வருடத்திற்கு 700 டன் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும் வரும் காலங்களில் பயிரிடும் அளவு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக் கவும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.மேலும் அதனை ஊக்குவிக்கும் வகையில், கமுதி தனியார் திருமண மண்டபத்தில், நேற்று இப்பகுதி யில் உள்ள இயற்கை விவசாயிகளை பாராட்டி, பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இவ் விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் அதிக அளவில் இயற்கை விவசாயம் செய்து வரும் கோரைப்பள்ளத்தை
சேர்ந்த ராமர் என்பவருக்கு இந்திய அளவில் சிறந்த இயற்கை விவசாயத் திற்கான ஜெய்வீக்இந்திய விருது மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.


மேலும் இயற்கை விவசாயிபாக்குவெட்டியை சேர்ந்த உருவாட்டி என்பவருக்கு சிறந்த விவசாய ஒருங்கிணைப் பாளர் என்ற விருது மற்றும்
நினைவுப் பரிசு வழங்கப் பட்டது. சஸ் அக்ரி டெவலப்மெண்ட் எனும் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), தனுஷ்கோடி,வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் டாக்டர் ராம்குமார்,
மாவட்ட தோட்டக்கலை இயக்குனர் குமார், வட்டாட்சியர் சேதுராமன், வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி மற்றும் சஸ் அக்ரி தனியார் நிறுவன நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Previous Post

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கியது நீதிமன்றம்

Next Post

நான்கு MGM நிறுவனங்களில் உள்ள பங்குகள் ED-யால் பறிமுதல்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நான்கு MGM நிறுவனங்களில் உள்ள பங்குகள் ED-யால் பறிமுதல்..!

நான்கு MGM நிறுவனங்களில் உள்ள பங்குகள் ED-யால் பறிமுதல்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In