இதில் தமிழிசைதான் முதலிடத்தில் இருக்கிறார். சமீபத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேசியிருக்கிறார், தமிழிசை. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியவர், “அந்தமான் நிகோபாருக்கான பா.ஜ.க தலைவரை தேர்வு செய்வதற்கான சிறப்பு அதிகாரியாக நான் செல்கிறேன். இது தொடர்பாகவும், தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் பற்றியும் நட்டாவிடம் பேச உள்ளேன்” என தெரிவித்திருந்தார். அதன்படி நட்டாவை சந்தித்த தமிழிசை பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
