Tuesday, November 3, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாமக கூட்டணி ஆட்சி; நிறைவேறுமா அன்புமணி ஆசை?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
பாமக கூட்டணி ஆட்சி; நிறைவேறுமா அன்புமணி ஆசை?
9
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தொடர் பின்னடைவுகள் ஏற்பட்ட போதும், “2026-ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சியமையும்” என்று இப்போது அடித்துச் சொல்கிறார் அன்புமணி. அப்படியானால் தனித்துப் போட்டி எனும் மனநிலையிலிருந்து வெளிவந்துவிட்ட அன்புமணி, தனக்கு ஏற்ற கூட்டணியை அமைக்கும் யோசனையில் உள்ளார் என்பது தெளிவாகிறது.

இதற்கு முன்னோட்டமாக 2024 மக்களவைத் தேர்தலை பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிகளில் இல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஒருபக்கம் இறங்கியுள்ளது பாமக டீம். இதன்படி அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளலாமா என்று அன்புமணி வியூகம் வகுப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதில் சிக்கல் என்னவென்றால், பாமகவுக்கு எப்படி தென்மாவட்டங்களில் வலுவான அடித்தளம் இல்லையோ, அதேபோல தினகரன் – ஓபிஎஸ்சுக்கு வடமாவட்டங்களில் வலுவான ஆதரவு கிடையாது. எனவே இவர்களோடு கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது என்பது தனித்துப் போட்டியிடுவதற்குத்தான் சமம். தேமுதிகவுக்கு வடமாவட்டங்களில் முன்பு நல்ல வாக்கு வங்கி இருந்தது, இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டதை கடந்த கால தேர்தல் முடிவுகளிலிருந்தே பார்க்கலாம். எனவே அதிமுக, திமுக அல்லாத மூன்றாவது அணி அன்புமணிக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதும் கேள்விக்குறிதான்.

ஆனாலும், 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டுமானால், அதற்கு தொண்டர்களை தயார் செய்யும் விதமாக 2024-லேயே தனித்து களமிறங்கி அதே விறுவிறுப்போடு இரு ஆண்டுகள் பயணிக்க வேண்டும் என்பதுதான் நிதர்சனம். இதற்கு பாமக தொண்டர்கள் தயாராக இருக்கிறார்களா என்பது அன்புமணியும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

2024-ல் அன்புமணி எம்.பியும் ஆகவேண்டும், 2026ல் அன்புமணி முதல்வரும் ஆகவேண்டும் என்ற இருவேறு நோக்கங்களுடன் பயணிப்பது பாமக கத்திமேல் நடப்பதற்குச் சமம்.

.

Tags: அனபமணஆசஆடசகடடணநறவறமபமக
Previous Post

ராமநாதபுரத்தில் வீடுகளில் பச்சைக்கிளி வளர்க்க தடை: மீறினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம்

Next Post

500 கோடி வசூல் செஞ்சா இது நல்ல படமா?.. ஜெயிலரை துவச்சி காயப்போட்ட தங்கர் பச்சான்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
500 கோடி வசூல் செஞ்சா இது நல்ல படமா?.. ஜெயிலரை துவச்சி காயப்போட்ட தங்கர் பச்சான்..

500 கோடி வசூல் செஞ்சா இது நல்ல படமா?.. ஜெயிலரை துவச்சி காயப்போட்ட தங்கர் பச்சான்..

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    பா மா கா கூட்டணி ஆட்சி நிறைவேறுமா அன்புமணி ஆசை . இது ஆசை அல்ல பேராசை கண்டிப்பாக நிறைவேறாது முயற்சி செய்யவே வேண்டாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In