Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

புதிய முகங்களை முதலமைச்சர்களாக்கியது ஏன்? பா.ஜ.க.வின் அரசியல் கணக்கு என்ன?- ஓர் அலசல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 13, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
புதிய முகங்களை முதலமைச்சர்களாக்கியது ஏன்? பா.ஜ.க.வின் அரசியல் கணக்கு என்ன?- ஓர் அலசல்
33
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கான முதலமைச்சர்களாக புதிய முகங்களை, பாஜக தேர்வு செய்திருப்பதன் பின்னணி என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

5 மாநில தேர்தல்:

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னோட்டமாக தான் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் கருதப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 3ம் தேதி எண்ணப்பட்ட நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இது பாஜகவிற்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. அதேநேரம், 3 மாநிலங்களிலும் யாருமே எதிர்பாராத விதமாக மூத்த தலைவர்களை கழற்றிவிட்டு புதுமுகங்களை முதலமைச்சர்களாக தேர்வு செய்து பாஜக அதிர்ச்சி தந்துள்ளது. 

முதலமைச்சரான புதுமுகங்கள்:

தேர்தல் வெற்றிக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் சத்தீஸ்கரில் ராமன் சிங் ஆகியோர் முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த மூன்று தலைவர்களுக்கு பா.ஜ.க. கல்தா கொடுத்தது. வழக்கத்திற்கு மாறாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் நீண்ட இழுபறிக்குப் பிறகு சத்தீஸ்கரில் தியோ சாய், மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவ் மற்றும் ராஜஸ்தானில் பஜன்லால் சர்மா ஆகிய புதுமுகங்களை முதலமைச்சராக தேர்வு செய்தது. இதில், பஜன் லால் சர்மா என்பவர் சட்டமன்ற உறுப்பினராகவே தேர்வு செய்யப்படுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் மோகன் யாதவ் இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார்.

பாஜகவின் நாடாளுமன்ற தேர்தல் கணக்கு:

புதிய முகங்களின் தேர்வு பாஜக எம்.எல்.ஏக்களுக்கே அதிர்ச்சியாக தான் இருப்பதாக கூறப்படுகிறது.  ஆனால், அக்கட்சி தலைமையின் இந்த முடிவுக்கு பின்னணியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான மிகப்பெரிய கணக்குகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான சமூகத்தின் வாக்குகளை கவர்வதோடு, அண்டை மாநில சூழலையும் கருத்தில் கொண்டு தான் பாஜக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் தேர்தல் கணக்கு:

அதன்படி, சத்தீஸ்கரில் முன்னாள் மத்திய அமைச்சரான விஷ்ணு தியோ சாய் முதலமைச்சராகியுள்ளார். அதற்கான போட்டியிலேயே இல்லாத அவருக்கு திடீரென இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காரணம் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக உள்ள சூழலில், அவர்களை கவரும் விதமாக அந்த சமூகத்தில் இருந்து முதல் நபராக விஷ்ணு தியோ சாய் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை காரணமாக ஏற்பட்டு இருக்கும் எதிர்ப்பை சமாளிக்கவும் பாஜக இந்த முடிவை எடுத்துளதாக கூறப்படுகிறது. 

மத்திய பிரதேசம் தேர்தல் கணக்கு:

இதேபோன்று மத்திய பிரதேசத்திலும் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோஹன் யாதவ் முதலமைச்சராகியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு வெளியானபோது அவரே நம்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாந்லத்தில் ஒபிசி சமூகத்தினர் பெரும்பான்மையாக இருந்தாலுமே, யாதவ சமூகத்தை சேர்ந்தவரை முதலமைச்சராக பாஜக தேர்வு செய்துள்ளது.

காரணம் பீகாரில் தேஜஸ்விக்கும்,  உத்தரபிரதேசத்தில் அகிலேஷிற்கும், யாதவ சமூக மக்களிடையே இருக்கும் ஆதரவை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்காக மத்தியபிரதேசம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களையும் கருத்தில் கொண்டு பாஜக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.

ராஜஸ்தான் கணக்கு: 

ராஜஸ்தானில் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த பஜன் லால் சர்மா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட, ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த தியா குமாரி மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சந்த் பைரவா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநில பாஜகவில் வசுந்துரா ராஜேவின் ஆதிக்கத்தை அக்கட்சி தலைமை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அதோடு, நீண்ட கால வெற்றிக்கான மாற்றமாக இந்த முடிவு அமையும் எனவும் கட்சி தலைமை நம்பியுள்ளது

Previous Post

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறை சார்பில் பாரதியாரின் முழுத் திருவுருவச் சிலை திறப்பு.

Next Post

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்..!

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In