ஹைதராபாத்: தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் உள்ள ஏழைப் பெண்களுக்கு ஆண்டிற்கு நான்கு காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார்.
வரும் 30ம் தேதி நடைபெறும் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெலுங்கானாவில் நாங்கள் நிறைய வாக்குறுதிகளை அளித்துள்ளோம். அதில் ஒன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவோம் என்பது.
முஸ்லிம் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவந்து, எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,க்கு இடஒதுக்கீடு அளிப்போம். மாநிலத்தில் உள்ள ஏழைப் பெண்களுக்கு ஆண்டிற்கு நான்கு காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளோம். ஊழலுக்கு காரணமானவர்களை தண்டிப்பதற்காக கமிட்டி அமைத்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.


ஐயா மக்கள் யாருக்குமே இலவசம் கொடுக்க வேண்டாம் நீங்கள். ஏழை பெண்களுக்கு என்று சொல்கிறீர்கள் அந்த ஏழைகளின் தரத்தை உயர்த்த முன் வாருங்கள் அதாவது டாலரின் மதிப்பு கூடிக் கொண்டே செல்கிறது அந்த டாலரின் மதிப்பை குறையுங்கள் அதுவே போதுமானது. இந்த டாலரின் மதிப்பு வருடத்திற்கு மூன்று ரூபாய் வீதம் 10 வருடத்தில் 30 ரூபாய் கூடி இருக்கிறது 10 வருடம் என்பது தங்களின் ஆட்சி காலத்தில் சொல்கிறேன். ஏழை மக்களுக்கு என்று சொல்லி நம் இந்தியாவையே ஏழை நாடாக மாற்றி விட வேண்டாம்