Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஏர் இந்தியா : சக்கர நாற்காலி இல்லாததால் ஒரு உயிர் பலி : பயணிகள் கண்டனம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 16, 2024
in Default
1
ஏர் இந்தியா : சக்கர நாற்காலி இல்லாததால் ஒரு உயிர் பலி : பயணிகள் கண்டனம்..
19
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி கிடைக்காமல் நடந்து சென்ற 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை விமான நிலையம்

மும்பை விமான நிலையம்

அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து கடந்த 12ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் மும்பைக்கு 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வந்தார். அவரால் நடக்க இயலாத நிலையில் மும்பை விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் சக்கர நாற்காலி உதவி கோரினர். அப்போது, சக்கர நாற்காலிகள் மற்றப் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால் சிறிது நேரம் காத்திருக்குமாறு விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், குடி வருகை (இமிகிரேஷன்) செயல்முறை கவுன்ட்டருக்கு முதியவர் நடந்து சென்றார்.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

அப்போது, திடீரென அந்த முதியவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முதியவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் முதியவர் இறந்துவிட்டார்.

முதியவர்

முதியவர்

உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளோம். அவர்களுக்கு தேவையான உதவிகளை அளித்து வருகிறோம். முன்கூட்டியே முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் சக்கர நாற்காலி உதவியை வழங்கும் கொள்கயை நிறுவனம் பின்பற்றுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. சக்கர நாற்காலி கிடைக்காமல் முதியவர் உயிரிழந்த சம்பவம் விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

விசிக துணை பொதுச்செயலாளர் ஆனார் லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா! அடுத்தது MP சீட்?

Next Post

TNPSC: புதிய உறுப்பினர்கள் நியமனம் – தமிழக அரசின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TNPSC: புதிய உறுப்பினர்கள் நியமனம் – தமிழக அரசின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர்

TNPSC: புதிய உறுப்பினர்கள் நியமனம் - தமிழக அரசின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர்

Comments 1

  1. Rajesh says:
    3 years ago

    மும்பை விமான நிலையத்தில் சர்க்கரை நாற்காலி இல்லை என்பதுதான் கருத்து ஆனால் ஏர் இந்தியாவை சொல்வது எதற்காக மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி இல்லை அதுதானே உண்மை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In