ஏர் இந்தியா நிறுவனத்தின் 8 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் – இஸ்ரேல் வான்வெளி மூடல் காரணமாக அடுத்த சில நாள்களுக்கு 15 சதவிகித சேவைகளை குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐ906 துபை – சென்னை
ஏஐ308 தில்லி – மெல்போர்ன்
ஏஐ309 மெல்போர்ன் – தில்லி
ஏஐ2204 துபை – ஹைதராபாத்
ஏஐ874 புணே – தில்லி
ஏஐ456 அகமதாபாத் – தில்லி
ஏஐ2872 ஹைதராபாத் – மும்பை
ஏஐ571 சென்னை – மும்பை
