Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தேர்தல் தேதியை எழுதிக் கொடுத்துவிட்டு தான் மோடி தமிழ்நாடு பிரசாரக்கூட்டங்களை முன்பே நடத்தியுள்ளார். ..!! சீறிப்பாயும் எதிர்க்கட்சிகள்..!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 16, 2024
in Default
1
தேர்தல் தேதியை எழுதிக் கொடுத்துவிட்டு தான் மோடி தமிழ்நாடு பிரசாரக்கூட்டங்களை முன்பே நடத்தியுள்ளார். ..!! சீறிப்பாயும் எதிர்க்கட்சிகள்..!!
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்ததால்தான் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடிக்கடி பிரசாரத்துக்கு வந்தார் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனு தாக்கலானது, வரும் 20ஆம் தேதி துவங்கி, 27ஆம் தேதி நிறைவடைகிறது. திமுக கூட்டணி தவிர, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகள் கூட்டணியையே இன்னும் இறுதி செய்யாத நிலை உள்ளது.

இந்நிலையில், வேட்பு மனுதாக்கல் துவங்குவதற்கு இன்னும் 3 நாள்களே உள்ளன. அதற்குள் கூட்டணியை முடிவு செய்து, வேட்பாளர்களை அடையாளம் கண்டு, மனுத்தாக்கல் செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் தேதியை பிரதமர் மோடி எழுதிக்கொடுத்த படியே தேர்தல் ஆணையம் வாசித்துள்ளது என்றும், இந்த தேதியை முன்கூட்டியே முடிவு செய்ததன் காரணமாக தான் பிரதமர் மோடி தமிழகத்துக்கு 5 முறை வந்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி என்னதான் பிரசாரம் செய்தாலும் பாஜகவுக்கு தோல்விதான் மிஞ்சும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கிடையே, செல்வப் பெருந்தகையின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், “பிரதமர் மோடி, தமிழகத்துக்கு வந்ததுபோலவே, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா என பல்வேறு மாநிலங்களுக்கும் சென்றுள்ளார். அவர் தேர்தல் தேதியை தெரிந்து கொண்டு தமிழகத்துக்கு அடிக்கடி வந்து சென்றார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. தமிழகத்தில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என சொல்லும் எதிர்க்கட்சியினர், பிரதமர் வருகையை கண்டு ஏன் பயப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

100 நாள் வேலை ஊதியம் ரூ.400 ஆக உயர்வு..!! இனி நகர்ப்புறங்களிலும் வேலை..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Next Post

“ ED, CBI, IT போன்ற பணம் பறிக்கும் பெரிய கும்பல் மோடியிடம் உள்ளது”: ராகுல் கொடுத்த GUARANTEE..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ ED, CBI, IT போன்ற பணம் பறிக்கும் பெரிய கும்பல் மோடியிடம் உள்ளது”: ராகுல் கொடுத்த GUARANTEE..

“ ED, CBI, IT போன்ற பணம் பறிக்கும் பெரிய கும்பல் மோடியிடம் உள்ளது”: ராகுல் கொடுத்த GUARANTEE..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    பாராளுமன்றத்தில் பொது நலனுக்கு எதிராக எந்த ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்தாலும் வெளிநடப்பு என்ற பெயரில் அந்தச் சட்ட திருத்தத்தை எதிர்க்காமல் ஓடி ஒளிந்து கொள்ளும் இந்த எதிர்க்கட்சிகள் பணத்திற்கு விலை போன அடி மாடுகள் .தற்போது இந்த எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்து என்ற உடன் கூப்பாடு போடுகின்றன

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In