Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறழ்சாட்சியம் : வற்புறுத்தலால் கோப்புகளில் கையெழுத்திட்டதாக வாக்குமூலம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 8, 2024
in Default
1
அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறழ்சாட்சியம் : வற்புறுத்தலால் கோப்புகளில் கையெழுத்திட்டதாக வாக்குமூலம்!
16
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடந்த 2006-11 காலகட்டத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடிபதவி வகித்தபோது விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடிஅளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் ராஜமகேந்திரன், வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது2012-ல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் ஆகியுள்ளார்.

வழக்கு விசாரணைக்கு வந்த முன்னாள் கிராம உதவியாளர் மணி என்பவர் பிறழ் சாட்சியமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று அரசு அதிகாரிகளின் அறிவுரைப்படி சோதனை நடத்த சென்றதாக முன்னாள் கிாரம உதவியாளர் மணி கூறியுள்ளார்.

சோதனை முடித்த பின்னர் அதிகாரிகளின் வற்புறுத்தல் பேரில் கோப்புகளில் கையெழுத்திட்டேன், மற்ற விவரங்கள் ஏதும் தனக்கு தெரியாது என பிறழ் சாட்சியமாகியுள்ளார்.இதுவரை 34 பேர் அரசு தரப்பு சாட்சியமாக சாட்சியம் அளித்துள்ள நிலையில், 27 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

Previous Post

ஜம்முவில் இந்து கோவில் எரிப்பு: அதிரடியாக கைது செய்த போலீஸ்..

Next Post

செல்வப்பெருந்தகை முன்னாள் ரவுடியாச்சே.. அவர்ட்ட கேளுங்க.. நிதானத்தை இழந்த அண்ணாமலை..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செல்வப்பெருந்தகை முன்னாள் ரவுடியாச்சே.. அவர்ட்ட கேளுங்க.. நிதானத்தை இழந்த அண்ணாமலை..

செல்வப்பெருந்தகை முன்னாள் ரவுடியாச்சே.. அவர்ட்ட கேளுங்க.. நிதானத்தை இழந்த அண்ணாமலை..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    பிறழ் சாட்சியம் அளித்தவர்கள் மீது நீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்ற அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தவறு செய்தவர்கள் அனைவரும் தப்பி விடுவர்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In