கரூர் சம்பவத்தில் தமிழக அரசு தனது கடமையை சிறப்பாக செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும் செய்தது. பெருந்தன்மையோடு நடந்த முதல்வரை சிறுமைபடுத்தவேண்டும் எனப் பேசுபவர்கள் சிறுமைபட்டு போவார்கள்.
41 பேர் உயிரிழந்தவுடன் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி ஒளிந்தவர்கள், நானும் ரெளடிதான் என வடிவேலு நகைச்சுவை போல சொல்லி வருகிறார்கள்.

கரூர் சம்பவத்தில் தமிழக அரசு தனது கடமையை சிறப்பாக செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும் வழங்கியது. பெருந்தன்மையோடு நடந்த முதல்வரை சிறுமைபடுத்தவேண்டும் எனப் பேசுபவர்கள் சிறுமைபட்டு போவார்கள்.
41 பேர் உயிரிழந்தவுடன் ‘துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என ஓடி ஒளிந்தவர்கள், ‘நானும் ரெளடிதான்’ என வடிவேலு நகைச்சுவை போல சொல்லி வருகிறார்கள்.
நடிகர் விஜய் பலவீனமானவர். ஒரு பிரச்னை வந்தால், அவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் ஓடி ஒளிந்துக் கொள்கிறார்கள். பலவீனமானவர்கள் தங்களை வீரன் எனக் காட்டிக் கொள்ள எதையாவது சொல்லிக் கொள்வார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து என்ன ஆனார்கள் என்பது வரலாற்றில் உள்ளது,” என்றார்.
