Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

17 பந்துகளில் அரைசதம்; அபிஷேக் சர்மா சாதனை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 2, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
17 பந்துகளில் அரைசதம்; அபிஷேக் சர்மா சாதனை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 2) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.

இதையும் படிக்க: ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

அபிஷேக் சர்மா அதிரடி

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். சஞ்சு சாம்சன் அதிரடியாக தொடங்கினாலும், 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார். அதிரடியாக விளையாடிய அவர் 17 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார். இதன் மூலம், இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்தார்.

இதையும் படிக்க: மிகவும் சிறப்பான தருணம்… உலகக் கோப்பையை வென்றது குறித்து மனம் திறந்த இந்திய கேப்டன்!

கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே, இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

PM Modi: ஜகார்த்தா முருகன் கோயில் குடமுழுக்கு.. முருகனுக்கு அரோகரா எனக்கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Next Post

TVK: அறிக்கை அரசியல்; `டார்கெட்’ திமுக – தவெகவின் ஓராண்டு பயணம் எப்படியிருந்தது?|article about vijay’s tvk 1 year journey

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK: அறிக்கை அரசியல்; `டார்கெட்’ திமுக – தவெகவின் ஓராண்டு பயணம் எப்படியிருந்தது?|article about vijay’s tvk 1 year journey

TVK: அறிக்கை அரசியல்; `டார்கெட்' திமுக - தவெகவின் ஓராண்டு பயணம் எப்படியிருந்தது?|article about vijay's tvk 1 year journey

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In