
உணவுப் பாதுகாப்புத்துறை வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி, தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் சுகாதாரமற்ற முறையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 37 கோடி ரூபாய் மதிப்பிலான 15,000 டன் மக்காச்சோளம் மூட்டைகளை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மோடி தலைமையிலான பா.ஜ.க-வின் 9 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மேற்கு தாம்பரத்திலுள்ள சண்முகம் சாலையில், மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பெருமாபாளையம் ஊராட்சிட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் நள்ளிரவில் பெய்த மழைக்கு இடிந்து விழுந்த வீடு.

எடப்பாடி அரசு மருத்துவமனைக்குச் சொந்தமான இடத்தில் தனிநபர் ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டியதைக் கண்டித்து, ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த ஆம் ஆத்மி கட்சியினர்.

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க திரண்டு வந்த விவசாயிகள்.

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி, ம.தி.மு.க சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சியை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

கூடலழகர் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவொற்றியூர், மணலி உயர் மட்ட பாலம் அருகே பக்கிங்ஹாம் கால்வாயில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நுரை நிரம்பி காட்சியளிக்கிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம், டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்றது.

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருள்கள் வழங்குவதைக் கண்டித்து, கெட்டுப்போன அரிசியுடன் போராட்டம் நடத்திய பெண்கள்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட மாவட்ட
வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

25-ம் தேதி வேலூர், ஜலகண்டேஸ்வரா ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளின் தரத்தை ஆய்வுசெய்யும் ஆணையாளர் பிரதாப்.

ரேஸ் கோர்ஸ் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் மீடியா ட்ரீ, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

