Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சாதாரண மரணம் என்னை அண்டாது.. கணவரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து பேசிய மனைவி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 6, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சாதாரண மரணம் என்னை அண்டாது.. கணவரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து பேசிய மனைவி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தன்னுயிரை பணயம் வைத்து, சக ராணுவ வீரர்கள் நால்வரை காப்பாற்றிய கேப்டன் அன்ஷுமான் சிங்குக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்புப்பணியின்போது, கேப்டன் அன்ஷுமான் சிங் வீரமரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய ராணுவத்தினருக்கான மிக உயரிய விருதுகளில் இரண்டாவதாகப் போற்றப்படும் கீர்த்தி சக்ரா விருது வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் வெள்ளிக்கிழமை(ஜூலை 5) நடைபெற்றது.

ராணுவம், துணை ராணுவம், காவல்துறை ஆகிய நாட்டின் பாதுகாப்புப் படைகளில் துணிச்சலை வெளிப்படுத்தி, திறம்பட பணியாற்றிய வீரா்களுக்கு அவா்களின் வீரதீரத்தைப் பாராட்டி ‘வீரதீர’ விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவியும், தாயாரும் வருகை தந்திருந்தனர். மறைந்த வீரா்களுக்கு வழங்கப்பட்ட வீரதீர விருதுகளை அவா்களின் குடும்பத்தினா் பெற்று கொண்டனா்.

அப்போது கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிரிதியிடம் கீர்த்தி சக்ரா விருதை வழங்கி கௌரவித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. அப்போது இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் உபேந்திர திவிவேதி உடனிருந்தார்.

விருதைப் பெற்றுக்கொண்ட கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிரிதி சிங், தனது காதல் கணவர் அன்ஷுமான் சிங் பேசியதை நினைவுகூர்ந்துள்ளார். கேப்டன் அன்ஷுமான் சிங் பேசுகையில், சாதாரண மரணம் தன்னை அண்டாது எனவும், வீரமரணமடைவேன்! என்றும் தன்னிடம் கூறியிருந்ததை ஸ்மிரிதி சிங் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.



.

Previous Post

South Korea: வேலைப்பளு; மன அழுத்தம்; தென் கொரியாவில் தற்கொலை செய்து கொண்ட ரோபோ! | Robot commits suicide in South Korea because of work pressure and depression

Next Post

First budget of Modi 3.0: ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்! வருமான வரி உச்ச வரம்பு மாற்றப்படுமா? இதோ முழு விவரம்!-first budget of modi 3 0 to be presented on july 23 in lok sabha

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post

First budget of Modi 3.0: ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்! வருமான வரி உச்ச வரம்பு மாற்றப்படுமா? இதோ முழு விவரம்!-first budget of modi 3 0 to be presented on july 23 in lok sabha

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In