மாதவரம்,ஏப்.5.சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் தாசார்புரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கிருபை ஜான் வயது 58 இவரது மனைவி தீபம் வயது 55 வீட்டின் இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றார்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள்வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரூபாய் 30 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர் இது குறித்து திருநின்றவூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சாய் கணேஷ் தனிப்படை அமைக்கப்பட்டுவழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர் விசாரணையில் சம்பவம் தொடர்பாக சுதேசி நகர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சத்யா வயது (20) என்பவரை குற்றப்பிரிவு ஆய்வாளர் சாய் கணேஷ் கைது செய்து விசாரணை செய்தனர் விசாரணைக்கு பின் ஆசிரியர் தீபத்திடம் பள்ளியில் சத்யா ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார் என்பது தெரிய வந்தது பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர் வீட்டில் திருடியது தெரியவந்தது பின்னர் போலீசார் அவரிடம் இருந்து 24.1/2. தங்க நகை. 100. கிராம் வெள்ளி ரூபாய் 60 ஆயிரம் பணம் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்தனர் இவர் சில தினங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது



