Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களுடன் பழக்கம்..! அந்தரங்க படங்கள் எடுத்து மிரட்டல்..! சிக்கிய டெல்லி இளைஞர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2025
in அரசியல் செய்திகள்
0
டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களுடன் பழக்கம்..! அந்தரங்க படங்கள் எடுத்து மிரட்டல்..! சிக்கிய டெல்லி இளைஞர்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



Last Updated:January 05, 2025 7:53 AM IST

பம்பிள், ஸ்னாப்சாட், வாட்ஸ் ஆப் ஆகிய செயலிகளில் போலி முகவரிகளை உருவாக்கி, அதில் தன்னை ஒரு அமெரிக்க மாடல் என கூறியுள்ளார்.

டெல்லி இளைஞர் கைது

டேட்டிங் செயலிகள் மூலம் 700 பெண்களுடன் பழகி டெல்லி இளைஞர் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேட்டிங் செயலியில் பழகிய மாடலிங் துறையைச் சேர்ந்த ஒருவர், தனது அந்தரங்க படங்களைக் காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக டெல்லி பல்கலைக்கழக மாணவி, கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி டெல்லி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக, டெல்லி ஷகர்பூரைச் சேர்ந்த 23 வயதான பிபிஏ பட்டதாரி துஷார் பிஸ்த்-ஐ கைது செய்தனர். விசாரணையில் அவர் கூறியதைக் கேட்டு போலீசாருக்கே தலை சுற்றிவிட்டது. அவரால் பாதிக்கப்பட்டது இந்த ஒரு மாணவி மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக 700 இளம்பெண்கள் என்பது அதிர வைத்தது.

இதையும் படிக்க: டெல்லி சட்டசபை தேர்தல் : கெஜ்ரிவாலுக்கு எதிராக களமிறங்கும் பாஜக வேட்பாளர் இவர்தான்! யார் இந்த பர்வேஷ் வர்மா?

பம்பிள், ஸ்னாப்சாட், வாட்ஸ் ஆப் ஆகிய செயலிகளில் போலி முகவரிகளை உருவாக்கி, அதில் தன்னை ஒரு அமெரிக்க மாடல் என கவர்ச்சிகரமாகக் காட்டிய துஷார் பிஸ்த், இந்தியாவில் வரன் தேடுவதாகக் கூறி பழகியுள்ளார்.

18 வயது முதல் 30 வரை உள்ள பெண்களைக் குறிவைத்து தன் வலையில் வீழ்த்திய துஷார் பிஸ்த், அவர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

துஷார் பிஸ்த்தின் செல்போனில் இருந்து ஏராளமான பெண்களின் படங்கள், அந்தரங்க வீடியோக்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை விவரங்களை காவல்துறையினர் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரிடம் இருந்து 13 கிரெடிட் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடக்கத்தில் நன்றாகப் பேசிய அவர், சில நாட்களுக்குப் பிறகு அந்தரங்கப் படங்களைக் கேட்டதாகவும், அதை வைத்து பின்னர் பிளாக் மெயிலில் ஈடுபட்டதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர் டெல்லியைச் சேர்ந்த ஷகர்பூர் என்ற இடத்தில் வசிப்பதாகவும், அவர் தந்தை தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், தாய் இல்லத்தரசியாகவும், சகோதரி குருகிராமில் பணிபுரிவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அவரின் மொபைலிலிருந்து 40-க்கும் மேற்பட்ட பெண்களின் சேட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

First Published :

January 05, 2025 7:53 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களுடன் பழக்கம்..! அந்தரங்க படங்கள் எடுத்து மிரட்டல்..! சிக்கிய டெல்லி இளைஞர்



.

Previous Post

M K Stalin: `சிந்துவெளி எழுத்து முறை; ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு’ – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | Tamil nadu cheif minister M K Stalin speech in sIndhu Valley Civilization event

Next Post

விழுப்புரம்: சு.வெங்கடேசன் எம்.பி-க்கு நெஞ்சுவலி – மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர்! | S. Venkatesan MP, who attended the conference in Villupuram has been admitted to the hospital

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விழுப்புரம்: சு.வெங்கடேசன் எம்.பி-க்கு நெஞ்சுவலி – மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர்! | S. Venkatesan MP, who attended the conference in Villupuram has been admitted to the hospital

விழுப்புரம்: சு.வெங்கடேசன் எம்.பி-க்கு நெஞ்சுவலி - மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர்! | S. Venkatesan MP, who attended the conference in Villupuram has been admitted to the hospital

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In