கேளம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கணவன்-மனைவி மீது தனியார் கம்பெனி பேருந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மாடம்பாக்கம் ஸ்ரீராம் நகர், நத்தஞ்சேரி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன்(53). மாமல்லபுரம் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளரான இவர் மாமல்லபுரத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்தார். விடுமுறை நாட்களில் வீட்டிற்கு சென்று விட்டு திங்கள்கிழமை காலை பணிக்கு திரும்புவது வழக்கம். வழக்கம் போல் வெள்ளிக்கிழமை மாடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றவர் திங்கள்கிழமை காலை அவரும் அவரது மனைவி ஜெயதுர்கா (47) இருவரும் மாடம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
