Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தக்காளி திருட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 6, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தக்காளி திருட்டு
13
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஹசன்: கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தக்காளி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி விலை நாடு முழுவதும் குறைந்தபாடில்லை. விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி தமிழகம், மேற்குவங்கம் என பல்வேறு மாநில அரசுகள் தக்காளியை நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் கோனி சோமனஹள்ளி கிராமத்தில் சோமசேகர் என்ற விவசாயியின் தோட்டத்திலிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தக்காளி திருடப்பட்டுள்ளது. சோமசேகர் கடந்த 3 ஆண்டுகளாக தக்காளி பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். செவ்வாய்க் கிழமை இரவு அவரது தோட்டத்துக்குள் புகுந்த திருடர்கள் 60 மூடைகளில் தக்காளியை எடுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து சோமசேகரின் மனைவி பர்வதம்மா கூறுகையில், “கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் தக்காளி மட்டுமே பயிரிட்டு வருகிறோம். மழை, நோய் எனப் பல காரணங்களால் வேறு பயிர்களை நாங்கள் பயிரிடவில்லை. இருப்பதோ 2 ஏக்கர் நிலம். அதில் நாங்கள் பாடுபட்டு விவசாயம் செய்தோம். ஆனால் அதையும் திருடர்கள் மொத்தமாக திருடிச் சென்றுள்ளனர். எஞ்சிய பயிர்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளனர்” என்றார். தக்காளி திருட்டு தொடர்பாக சட்டப்பிரிவு 379-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பருவமழை பொய்த்ததாலும், தேவை அதிகரிப்பாலும் தக்காளியின் விலை நாடு முழுவதும் தொடர்ந்து உச்சம் கண்டு வருகிறது. சராசரியாக ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தான் ஹசன் மாவட்டத்தில் இந்தத் தக்காளி திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

.

Tags: கரநடகவனதககளதரடடமதபபலனமவடடததலர.1.5லடசமஹசன
Previous Post

துணைவேந்தர் தேர்வுக் குழுவில் வட இந்தியரை நியமிக்க ஆளுநர் நிர்பந்தம் – அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

Next Post

Madurai: மதுரையில் வீடுகளில் இனி கிளிகள் வளர்த்தால் அவ்வளவு தான் – கடும் எச்சரிக்கை விடுத்த வனத்துறை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Madurai: மதுரையில் வீடுகளில் இனி கிளிகள் வளர்த்தால் அவ்வளவு தான் – கடும் எச்சரிக்கை விடுத்த வனத்துறை!

Madurai: மதுரையில் வீடுகளில் இனி கிளிகள் வளர்த்தால் அவ்வளவு தான் - கடும் எச்சரிக்கை விடுத்த வனத்துறை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In