Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`கோவையை கவர முதலமைச்சர் முயற்சிக்கிறார்’ – சந்திப்புக்குப் பின் வானதி சீனிவாசன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2024
in அரசியல் செய்திகள்
0
`கோவையை கவர முதலமைச்சர் முயற்சிக்கிறார்’ – சந்திப்புக்குப் பின் வானதி சீனிவாசன்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இதில் பாஜக மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் ஸ்டாலினிடம் சிறிது நேரம் உரையாடி, கோவை தொடர்பாக சில கோரிக்கைகளை வைத்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “கோவைக்கு முதலமைச்சர் நிறைய அறிவிப்புகளை கொடுத்துள்ளார். அவிநாசி சாலை மேம்பாலத்தை சின்னியம்பாளைம் முதல் நீலாம்பூர் வரை நீடிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் நான் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். தங்க நகை பூங்கா என்ற கோரிக்கையும் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன்.

விஸ்வகர்மா யோஜானா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முதலமைச்சரிடம் வைத்துள்ளேன். கோவை மெட்ரோ ரயில் பாதாள சாக்கடை, குப்பை இல்லாத கோவை, ஸ்மார்சிட்டி குளங்கள் பராமரிப்பு ஆகியவை குறித்தும் மனுவும் முதலமைச்சரிடம் வழங்கியுள்ளேன்.

மெட்ரோ ரயில் குறித்து பல்வேறு ஆவணங்கள் அரசு சார்பில் கொடுக்கப்படாமல் இருக்கிறது. அதையும் அவரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்.

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் ஒப்படைத்து விட்டதாக சொன்னார். ஒரு சிலர் இன்னும் அங்கு இருப்பது குறித்தும் கூறியுள்ளேன். உடனடயாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். கோவையில் சாலை பணிகளுக்காக கூடுதாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த 200 கோடியாவது தரமான முறையில் சாலைகள் அமைக்க செலவிடப்பட வேண்டும். கோவை வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான திட்டங்கள் தேவை. கோவையில் தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் ஆகியோர் முகாமிட்டுப் பணிகளை மேற்கொண்டு இருப்பதை

மக்கள்பிரதிநிதி என்ற முறையில் வரவேற்கிறேன். கோவையை கவர முதலமைச்சர் முயற்சி செய்கிறார். கோவையை கவர்ந்து விட்டாரா என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரியும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



.

Previous Post

'கடவுளே அஜித்தே… TVK' – முதல்வரின் கோவை நிகழ்ச்சியில் கோஷமிட்ட 2கே கிட்ஸ்!

Next Post

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதியில் போட்டி..! | In the Maharashtra Assembly Elections, the VCK is contesting

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதியில் போட்டி..! | In the Maharashtra Assembly Elections, the VCK is contesting

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதியில் போட்டி..! | In the Maharashtra Assembly Elections, the VCK is contesting

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In