கோயம்புத்தூரில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் ‘கடவுளே அஜித்தே…’, விஜய்யின் TVK கட்சி கோஷங்கள் எழுப்பப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை கிளப்பியிருக்கிறது.

கோயம்புத்தூரில் 300 கோடி ரூபாய் மதிப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை அமைக்க நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களும் நிறைய பேர் அழைத்துவரப்பட்டிருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போதே மாணவர்கள் சிலர் ‘கடவுளே அஜித்தே…’ த.வெ.க என கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்கிறது. ‘கடவுளே அஜித்தே…’ என்கிற கோஷம் இணையத்தில் இப்போது செம வைரல். எங்கேயோ அஜித் ரசிகர்கள் தொடங்கி வைத்த இந்த கோஷம் பரபரவென பற்றிக் கொண்டது.
தியேட்டர்களில் ஒலித்துக் கொண்டிருந்த இந்த கோஷம் அப்படியே இணையத்திலும் தொற்றி விறுவிறுப்பை கிளப்பியது. அஜித் ரசிகர்களை கடந்து ஒட்டுமொத்தமாக அத்தனை இளைஞர்கள் மத்தியிலுமே அந்த கோஷம் பிரபலமானது. செல்லும் இடங்களிலெல்லாம் ‘கடவுளை அஜித்தே…’ கோஷத்தை எழுப்பி ரீல்ஸாக பதிவிட்டு வைரல் செய்து வந்தனர். சமீபத்தில் சேப்பாக்கத்தில் இந்தியாவும் வங்கதேசமும் மோதிய டெஸ்ட் போட்டி நடந்திருந்தது. அதிலும் இளம் ரசிகர்கள் ஜாலியாக ‘கடவுளே அஜித்தே..’ கோஷத்தை எழுப்பி குதூகலித்திருந்தனர். வேறு நடிகர்களின் படம் ஓடும் திரையரங்குகள், கோவில், பூங்கங்கள் எல்லா இடங்களிலும் இந்த கோஷத்தை ஜாலியாக எழுப்பி வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் சில விஷயங்களுக்கு மதிப்பான காரணங்களே இருக்காது. வெறுமென ஜாலிக்காக மட்டுமே செய்யப்படும். அப்படியானதாகத்தான் இந்த ‘கடவுளே அஜித்தே..’ TVK கோஷமும் மாறி முதல்வரின் நிகழ்ச்சி வரை சென்றிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
