Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிமுக – பாஜக உறவில் எந்தப் பிரச்சினையும் இல்லை: வானதி சீனிவாசன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
அதிமுக - பாஜக உறவில் எந்தப் பிரச்சினையும் இல்லை: வானதி சீனிவாசன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தஞ்சாவூர்: பாஜக – அதிமுக உறவில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாபநாசத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் 9-ம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (ஜூன் 23) இரவு நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிஹாரில் எதிர்க்கட்சியினர் நடத்திய கூட்டம் போல், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அவர்களது சொந்த மாநிலங்களில் இதே கட்சியினர், இதே மாதிரியான கூட்டத்தை நடத்தி‌க் காட்ட வேண்டும்.

அங்கு மோடி அரசை எதிர்க்க வேண்டும் என ஒரே புள்ளியில் கூடியிருப்பவர்கள், ஒவ்வொருவரும் குடும்ப அரசியல், ஊழல் அரசியல், செய்து தங்களுடைய குடும்ப சுயநலத்துக்காக கட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இங்கு திறமையாக,நேர்மையாக, இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு மாற்றாக 16 பேர் அல்ல இன்னும் 100 பேர் சேர்ந்து வந்தாலும் அவரை வீழ்த்த முடியாது. இந்திய மக்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு மட்டும் தான் உள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை சீட்டுகள், எத்தனைக் கட்சிகள், எத்தனை தொகுதிகள் என தேசிய ஜனநாயக கூட்டணி தான் முடிவு செய்யும். பாஜக – அதிமுக உறவில் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்றார்.

.

Tags: அதமகஇலலஉறவலஎநதபசனவசனபரசசனயமபஜகவனத
Previous Post

Tamil News Today Live: தொடரும் மணிப்பூர் வன்முறை – இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!

Next Post

தென்காசி போலீஸ் கஸ்டடியில் இளைஞர் மரணம்? அடித்தே கொன்றதாக புகார்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தென்காசி போலீஸ் கஸ்டடியில் இளைஞர் மரணம்? அடித்தே கொன்றதாக புகார்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தென்காசி போலீஸ் கஸ்டடியில் இளைஞர் மரணம்? அடித்தே கொன்றதாக புகார்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In